பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 37 இந்த உலகில் மந்திர வாதிகளும் தந்திர வாதிகளும் வல்லவர்களாக இரு ப் பர். சகுனி ஒரு தந்திரவாதி. பேச்சில் திறமை மிக்கவன். இவனும் துரியோதனனும் திருத ராட்டிரனிடம் வருகின்றனர். துரியோதனனுக்காகப் பரிந்து பேசும் பேச்சில் இவன் திறமையைக் காணலாம். அவன் கூறுவான் : ஐயனே, நின் மகன் உடல் வற்றித் துரும்பாகி வாழ்வையே முற்றிலும் வெறுக்கின்றான். சரியாக உண்ப தில்லை; சரியாக உடுத்துவதுமில்லை. நண்பர்களோடு சரியாக உறவாடுவதில்லை; நாரியர்களையும் நச்சுவதில்லை' என்று கூறித் தன் பேச்சைத் தொடங்குகின்றான். பல்வேறு வகையில் தந்தை மைந்தனிடம் குழைந்து பேசி, மன்னும்அப் பாண்டவர் சோதரர்-இவை வாய்த்தும் உனக்குத் துயருண்டோ?" என்று முடிக்கும்போது அரவக் கொடியோன் அரவெனச் சிறி தன்னை மீறிப் பலவாறு பிதற்றத் தொடங்கியபோது அவன் சீற்ற மொழிகளைப், பொறுக்குமாறு வேண்டுவதில் இவனது நளினத்தைக் காணலாம். தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன் சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல் என்னைப் பணித்தனன், யானிவன்-றனை இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்; பிள்ளை நன்னய மேசிந்தை செய்கின்றான்; எனில் நன்கு மொழிவ தறிந்திலன்;-நெஞ்சைத் தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ் செய்தி தெளிய உரைப்பரோ?* என்பதில் இவனது தந்திரச் சாயலைக் காணலாம். அன்னியர் செல்வம் மிகுதல்போல் அரசர்க்கு ஆபத்து வேறு இருக்குமா? 40. டிெ 1 : 8 : 61 41. டிெ 1: 8. 63