பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 பாஞ்சாலி சபதம் என்று பேசுகின்றான். இராச சூயப் பெரு வேள்வியில் துரியோதனன் பட்ட அவமானத்தையும் இவனை நீக்கிக் கண்ணனுக்கு முதல் மரியாதை தந்ததையும் எடுத்துக்காட்டு கின்றான். பேச்சுக்கிடையில், பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப் பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக நீண்ட மகிதலம் முற்றிலும்-உங்கள் நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம் பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப் பொங்குகின்றான் நலம் வேட்கின்றான்-மைந்த ஆண்டகைக் கிஃது தகுமன்றோ? -இல்லை யாமெனில் வையம் நகுமன்றோ? ஆரியர் செல்வம் வளர்வதற்கே-நெறி ஆயிரம் நித்தம் புதியன-கண்டு வாரிப் பழம்பொருள் எற்றுவார்-இந்த வண்மையும் நீயறி யாததோ?* என்று துரியோதனன் கொண்ட கு றிக்கோளுக்கு ஒரு நியாயம் கற்பிப்பதில் இவனது பேச்சுத் திறனைக் காணலாம். சபையில் அமர்ந்திருக்கும் பொழுதில் தருமபுத்திரனைச் குதுப்போர்க்கு இழுந்த திறன் வியத்தற்குரியது: "அறத் தோன்றல், மன்னர் பலர் நெடும்பொழுதாக நின் வரவினைக் காத்துள்ளனர். வில்தொழிலால் புவி முழுவதையும் வென்று குலத்தினை மேம்படுத்தினர். குதுப் போருக்கு வா. நம் வலிமைகள் பார்ப்போம்' என்று அழைப்பு விடுக்கின்றான். தருமபுத்திரன் பல சாத்திர நியாயங்களைக் கூறி மறுத் திடவும், சகுனி அவனை விட்டான் இலன் கூறுகின்றான் : 42. டிெ 1, 8 : 68, 70