பக்கம்:பாடு பாப்பா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு காட்டு தாயிடம்
அழகு பெருகும் உன்னிடம்
அன்பு காட்டு தந்தைக்கே
அறிவு பெருகும் உன்னிடம்

அன்பு காட்டு பகையிடம்
அமைதி நிலைக்கும் உன்னிடம்
அன்பு காட்டு உயிர்க்கெலாம்
அவனி போற்றும் உன்னையே!

புத்தர் சொன்ன பொன்மொழி
போற்றி அன்பு காட்டுவோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/10&oldid=1315797" இலிருந்து மீள்விக்கப்பட்டது