பக்கம்:பாடு பாப்பா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கக்குலை தொங்குதுபார்
மாமரத்திலே!
தகதகத்து மின்னுதுபார்
மாமரத்திலே!

கல்லெடுத்தே எறியலாமா
மாம்பழத்திலே?
கள்ளத்தனம் கூடாதுபார்
நமது நாட்டிலே!

கடைக்குவரும் வாங்கித் தின்போம்
வேண்டு மட்டுமே
கற்கண்டாய் இனிக்கும் அந்த
மாம்பழங்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/16&oldid=1315418" இலிருந்து மீள்விக்கப்பட்டது