பக்கம்:பாடு பாப்பா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளைக் காரன் கப்பலோடு
போட்டி போடவே
வீரர் வ. உ. சிதம்பரனார்
விட்ட கப்பலே!

உரிமைக் கப்பல்! அருமைக் கப்பல்
கடலின் நீரிலே
பெருமை யோடு சென்ற கப்பல்!
வெற்றிக் கப்பலே!

உரிமை காத்த வ. உ. சி. யை
வாழ்த்திப் பாடுவோம்!
அருமை யான தாயகத்தைக்
காத்து வாழுவோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/19&oldid=1318900" இலிருந்து மீள்விக்கப்பட்டது