பக்கம்:பாடு பாப்பா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கண்ணே கண்ணுறங்கு—கட்டிக்
கரும்பே கண்ணுறங்கு!
மண்ணைப் பொன்னாக்க—வந்த
மணியே கண்ணுறங்கு!

அன்பில் பிறந்துவந்த—இன்
அமுதே கண்ணுறங்கு!
என்னைப் பெற்றெடுத்த—என்
தாயே கண்ணுறங்கு

பொன்னே கண்ணுறங்கு—புதுப்
பூவே கண்ணுறங்கு !
மின்னல் ஒளிக் கீற்றே—சுவைத்
தேனே கண்ணுறங்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/20&oldid=1318903" இலிருந்து மீள்விக்கப்பட்டது