பக்கம்:பாடு பாப்பா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணா கண்ணா நடைபழகு
கண்ணின் மணியே நடைபழகு
இடக்கால் வலக்கால் சீராக
எடுத்து வைத்து நடைபழகு!

நல்ல நினைப்பே கொண்டிடுவாய்
நல்ல பேச்சே பேசிடுவாய்
நல்ல செயலே செய்திடுவாய்
நல்ல வழியே நடந்திடுவாய்!

உண்மை ஒன்றைப் பிடித்துக் கொள்
ஒவ்வோர் அடியாய் முன்னேறு
கண்ணா கண்ணா நடைபழகு
கண்ணின் மணியே நடைபழகு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/21&oldid=1318908" இலிருந்து மீள்விக்கப்பட்டது