பக்கம்:பாடு பாப்பா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கடவுள் சிலையைப் படைத்தான் சிற்பி

கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கடவுள் கோயில் படைத்தான் சிற்பி

கல்லைப் படைத்தார் கடவுள்-அதில்
கலையும் அழகும் படைத்தான் சிற்பி

கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கல்லில் கும்பம் படைத்தான் சிற்பி

கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கல்லுக்குப் பெருமை சேர்த்தான் சிற்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/30&oldid=1314821" இலிருந்து மீள்விக்கப்பட்டது