பக்கம்:பாடு பாப்பா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது






நாளிதழ் வாங்கிப் படியுங்கள்
        நாட்டு நடப்பை அறியுங்கள்
காலம் சுழலும் மாற்றத்தைக்
        கணக்காய் அறிந்துவாழுங்கள்!


அரசியலுண்டு; விலை மாற்றம்
        அறிய லாகும்; விளையாட்டும்
திருவிழாவும் ஆயிரமாம்
      செய்திகள் அறிந்து மகிழ்ந்திடலாம்!


உலகம் காணும் முன்னேற்றம்
        ஒவ்வோர் நொடியும் அறிந்திடவே
நாளிதழ் வாங்கிப் படியுங்கள்
        நாட்டு நடப்பை அறியுங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/34&oldid=1314887" இலிருந்து மீள்விக்கப்பட்டது