பக்கம்:பாடு பாப்பா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



யானையிது யானை சிவன் கோவில் யானை
அழகுமிக்க தேவன் ஏறிவரும் யானை!
கழுத்துமணி யசைய நடந்துவரும் யானை
கைதூக்கி வணக்கம் காட்டிவரும் யானை
தேங்காய்பழம் கொடுத்தால் திருத் துதிக்கை நீட்டி
வாங்கியுண்டு நன்றி வணக்கமிடும் யானை
குழந்தைகளை முதுகில் கொண்டு செல்லும் யானை
கொண்டாட்டம் போட்டுக் கொண்டுவரும் யானை
குளத்துக்குள்ளே இறங்கிக் குழாய்நீரில் குளிக்கும்
மகத்துவம் சேர் யானை மதிப்புமிக்க யானை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/36&oldid=1314826" இலிருந்து மீள்விக்கப்பட்டது