பக்கம்:பாடு பாப்பா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப் பூக்கொண்டுவா!
காக்காய் காக்காய்
கண்ணுக்கு மை கொண்டுவா
கோழி கோழி
கொண்டைக்குப் பூ கொண்டுவா!

என்றெல்லாம் மழலைப் பாடல்கள் தமிழ் மொழியில் நிறைய இருக்கின்றன. கவிமணி தேசிக விநாயகமும், பாவேந்தர் பாரதிதாசனும், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவும். கவிஞர் நாகமுத்தையாவும் இன்னும் பலரும் மழலைத் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் வளப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழில் மழலைப் பாடல்கள் மிகுதியாக வேண்டும் என்ற கருத்தில் கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்கள் படைத்துக் கொடுத்த அமுதப் பாட்டுகளின் இனிய தொகுப்பே இது.

இதனைக் குழந்தைகள் விரும்பும் வண்ணம் வண்ணப் படங்களோடு வெளியிட முன் வந்துள்ளோம். பெற்றோர் தம் அருமைக் குழந்தைகளுக்கு இந்நூலை வாங்கிக் கொடுத்து வடிக்கச் செய்து பயன்பெற - இன்பம் பெற வேண்டுகின்றோம்.

-தமிழாலயத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/6&oldid=1314743" இலிருந்து மீள்விக்கப்பட்டது