உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

இன்றுள்ள நமதரசைத் தமிழரசை வாழும்
       ஏழைகளின் தனியரசைக் குடியரசைத் தீமை
வென்றுபல நன்மைகளை நிலை நிறுத்த வேண்டி
       விரைவினிலே செயலாற்றும் புத்தரசை யாண்டும்
ஒன்றாக உழவரெலாம் தோள் கொடுத்துத் தாங்கி
       ஒப்பில்லாத் தமிழரசைக் கலையரசைக் காத்து
வென்றிடுவோம் எதிர்த்தபகை! இதுவே நம் வேலை!

       வீரர்காள்! உழவர்காள்! விரைந்தெழுவீர் இன்னே!

நாள்: 21-6-1969.

தலைப்பு: - திருக்குறளில் - உழவன்

குறிப்பு : பொன்னமராவதி வள்ளுவர் ஈறாயிரம் ஆண்டு - விழாக் கவியரங்கம், மாண்புமிகு தமிழ் நாட்டு முதலமைச் சர். கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெறுவதாக அறிவித்திருந்த விழாக்குழுவினர், திடுமெனத் தலைமையை மாற்றி அறிவித்து விட்டதால், முதலில் கலந்து கொள்ள முழு மனத்தோடு இசைவு தந்த புதுமைக் கவிஞர், மிகுந்த ஆர்வத்தோடு கவிதையை எழுதி வைத்திருந்தும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றாரில்லை! எனவே, இதுவும் அரங்கேறப் பெறாதது ஆகும்.

1. திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டைப் பகுதி, திருமயம் : வட்டத்திலுள்ள ஊரூர்; பொன்னன் அமரன் என்பார் வதிந்த ஊர்.

2. உரவு - வலிமை