உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. ஒன்றிரண்டு போதும்! (எண்சீர் விருத்தம்)

மந்திரியார் வந்துள்ளார்; வேழ வேந்தன்;1
       என்னிளவல்! வாழ்த்துகின்றேன்! ஆனால், என்றும்
செந்திரிபோல் அவர்பிறந்த தமிழ கத்தின்
       சிறப்பிற்கே அவர்வாழ்வு திகழ வேண்டும்!
முந்திரியார் முன்வந்து பலபேர் சென்றார்!
       முத்தமிழர் எப்பயனும் கண்டார் இல்லை!
நந்திரியாரி நமக்கெல்லாம் நன்மை சேர்ப்பார்!
       நற்றமிழ்போற் பல்லாண்டு வாழ்க நீடே!

(வேறு)


கடலூரீர்! இங்குள்ள கற்றறிந்த மக்காள்!
       கவியரங்கம் காணவந்த தாய்மாரே! வாழும்
2வடலூரில் வளர்ந்துலகிற் பிறக்கின்ற மக்கள்
       ஒன்றிரண்டால் உலகுய்யும்; உம்முயிரும் உய்யும்!
வடலூரில் வாழ்ந்தவர் போல் மனமடக்கப் போமோ?
       மக்களெலாம் அந்நிலையில் எங்கிருக்கக் கண்டோம்?
திடலூரிற் குடிசையுற்று வாழ்கின்ற மக்கள்
       சிறுகுடும்பம் சிறப்படைய ஒருகுழந்தை போதும்!

நம்நாடு வறுமையிலே நலிகின்ற நாடு!
       நாடோறும் முன்னேற நாமுழைக்கும் நாடு!
உம்மோடு கேட்கின்றேன்: மழைபொய்த்த போதும்,
       ஊரினிலே படியரிசி கிடைக்காத போதும்.
சும்மாவா இருக்கின்றீர்? ஆண்டுக்கொவ் வொன்றாய்க்
       குழந்தைகளைப் பெறுகின்றீர்; தொல்லை வடை
அம்மம்மா! அதிலேழை இவையே நாம் என்றும்! [கின்றீர்!

       அறிவுள்ள ஒன்றிரண்டு குழந்தைகளே போதும்!