157
கடல்சூழ்ந்த உலகத்தில் முடிமன்னர் நாட்டைக்
கடவுளரின் வழிவந்தோர் அரசரெனச் சொல்லி
அடல்சூழ்ந்த தோள்வலியால் குடிமக்கள் ஏய்த்தும்
அடக்குமுறை கையாண்டும் கோலோச்சி வந்தார்!
கெடல்சூழ்ந்த முடியாட்சி பயன்விளைத்த போதும்
கிளிக்கூண்டின் வாழ்க்கையிலே வாழ்ந்திருந்தார் மக்கள்!
மடல்சூழ்ந்த பூமணமும் தென்றலினங் காற்றும்
மண்ணடிமை தீருமட்டும் மணங்கூட்டப் போமோ?
தாய்விரித்த நல்வாழ்க்கைத் தாயகத்தில் மக்கள்
தகுவலிமை அற்றதினால் அறிவுபெற்ற சில்லோர்
பாய்விரித்த கலமேறி வழியறிந்து வந்து
படைகொண்டு குடியேறி அரசமைத்துக் கொண்டார்!
வேய்விரித்த வலைவீழ்ந்த புட்களைப்போல் மாற்றார்
வேலியின் கீழ் நசுக்குண்டு நல்லறிவு பெற்றோர்
வாய்விரித்துத் தாயகத்தின் வளவாழ்வை மீண்டும்
வாதாடிப் பெறுவதுவே விடுதலையாம்! வாழ்க!
வாயினுக்குப் பெரும்பூட்டு; கார்மழையில் காற்றில்
வளமைக்குப் பாடுபடும் திருக்கைக்குப் பூட்டு:
தாயினுக்குப் பெரும்பூட்டு; தாயகத்தின் மேன்மை
தழைத்திடவே நினைப்போர்க்குப் பெரும்பூட்டு, கற்றோர்
வாயினுக்குப் பெரும்பூட்டு வந்தாண்டோர் செய்கை
மனம்நொந்து தாயகத்தின் அடிமையெனும் குட்ட நோயினுக்குப்பெரும்பூட்டு! தேடிநாடிஆன்றகண்டார்!
நுழைபுலத்தார் செயற்பட்டார்; விடுதலையைக்
பெண்குலத்தார் பொற்டியைப் பிரித்தாள எண்ணிப்
பின்வந்த தன்னலத்தார் பேதமைப்பெண் என்றார்:
மண்குலத்தார் ஆணினங்கள் வண்டினத்தின் கூட்டம்
மனமொப்பி அக்கூற்றை வரவேற்றுக் கொண்டார்;