23
மலைபிறந்த முத்தருவி குறிஞ்சி முல்லை
மருதம்நீள் பாலைநெய்தல் ஊட்டும் அண்ணா
மலைபிறந்த முத்தய்யா அரசர், 'கெட்டி,
முத்தய்யா' எனமக்கள் வாயார்ந் தேற்றக்
கலைபிறந்த குடிப்பிறந்து தந்தை போலக்
கடல்சூழ்ந்த தென்னாடும் வேற்று நாடும்
குலைபிறந்த முக்கனியும் தேனும் போலக்
கொடுத்துதவி வாழ்கின்றார்! வாழ்க நீடே!
4
கலைசூழ்ந்த எதிர்காலத் தமிழர் நாட்டுக்
கன்னியரைக் காளையரை விளைத்து, முந்நீர்
அலைசூழ்ந்த திருநாட்டை ஈன்ற நாட்டை
ஆளுகின்ற அறிவியலை விளக்கும் அண்ணா
மலைசூழ்ந்த பல்கலையை நடத்தும் வாய்மை
மறத்தமிழர் துணைவேந்தர் நேர்மை யாளர்
விலைசூழ்ந்த ஒளிமணியாம் திருச்சி நாரா
யணசாமி விரிபுகழ்சேர் இனியர்! வாழ்க!
5
வான் பிறந்த செங்கதிராம் இராம நாதர்2
பண்டிதமா மணிவழியோர்; வித்த கர்;செந்
தேன்பிறந்த தீஞ்சொல்லார்; குளிர்ந்த நோக்கார்;
சிரித்துவர வேற்கின்ற அரிய செம்மல்;
கான்பிறந்த பூவாடிச் சோலை தங்கிக்
களிப்பூட்ட வருகின்ற தென்றற் காற்று;
'நான் பிறந்தேன் தமிழுக்கே' என்றே வாழும்
நல்லறிஞர்; தமிழ்க்கடலாம்! வாழ்க! வாழ்க!
6
திருவாலே அழியாத திருவைச் சேர்க்கும்
செயல்புரிந்தார் மலையரசர்; அன்னோர் உள்ளக்
கருவாகி உருவாகி வளத்தை நல்கும்
பல்கலைமா மன்றத்திற் கற்போர் தம்மை