46
தலைவர்: தூத்துக்குடி. வ. உ. சி. கல்லூரி முதல்வர். பேராசிரியர் திரு. அ. சீநிவாசராகவன், எம். ஏ.
தலைப்பு: நமது குடியரசில் - வேளாண்மை
நடத்தியவர்: புதுவை அரசுச் செய்தித் துறையினர்— குடியரசு நாள் விழாக் கவியரங்கம்
குறிப்பு: புதுவை மாநில ஆளுநர் மாண்புமிகு சீலம் அவர்களும், புதுவை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஆளுநர், கவிஞர் பாடலைக் கவியரங்கத் தலைவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லச் செய்து, கேட்டுச் சுவைத்து மகிழ்ந்தார்.
1. பாற்கடல் முறையே, திருப்பாற் கடல், நன்னெறிக் கடல், பக்கக்கடல், பால் கடல்,
சீநிவாசன் முறையே, திருமால், சீநிவாசராகவன், சீநிவாசராகவன், சீனியில் வாசம் செய்யும் எறும்பு.
2. புழைநீர்- நிலத்தைத் துளைத்தெடுக்கும் நீர்.
3. உழவன்-உழத்தி உரையாடற் பாடல்களில் இடக்க ரடக்கர்ப் பொருளும் உள்ளமை கண்டுணர்ந்தின் புறுக. இவை எழுத்தளவேயன்றி, அரங்கேறப்பெறாதவை எனவும் அறிக.
4. கூட்டும் - ஒன்று சேர்க்கும்.
5. கவிஞரின் இயற்பெயர் அரங்கசாமி. அதன் குறுக்கம் அரங்கன், இதுவும் ஒரு பொருள் என அறிக.