75
அரசுக்கு; நல்ல அமைச்சுக்கு, வீர
முரசுக்கு, மூத்த மொழிவழங்கு நல்லிசைப்
பண்ணுக்கு, யாப்புப் பழகுதமிழ்ச் செஞ்சொல்லாம்
எண்ணுக்கு, மெய்யில் எழுகின்ற நோய்பலவாம்
புண்ணுக்கும் மாமருந்தைப்போட்டோன் தமிழனன்றோ?
விண்ணே அவன்புகழ்! மெய்சிலிர்க்கும் பேச்செடுத்தால்!
எண்ண உயர்வில் இவன் போன்றார் இல்லையென்பேன்!
உண்ணும் உண்வைப் பகுத்துண்ணச் சொன்னான்!
தமிழ்மறை தந்த தமிழனாம் முப்பால்
அமிழ்தைப் பிழிந்தே அளித்த பெரும்புகழ்
ஏசுவை, ஏசு இயம்பிடு கொள்கையைப்
பேசிட வந்தோர் பிறமொழி யாளரே!
செந்தமிழைச், செந்தமிழின் சீர்த்திப் பெருஞ்சிறப்பைத்
தந்தார் உலகினுக்கே தக்கோர்! அவர்க்கெல்லாம்
இந்தநல் வேளை இருகையை நாம்கூப்பி
வந்தனை செய்து வணங்கிப் புகழ்வோமே!
மற்றவர் வாழ வழிவகுத்தான்; இன்பத்தைப்
பெற்றான்; பிறர்க்கு வழங்கினான்; பின்வந்த
சுற்றம் பகைக்கும், துயர் துடைக்கும் நல்லறிவைக்
கற்றுத் தெளிந்து கடல்சூழ் உலகிற்கு
வாரி வழங்கி மகிழ்ந்து பிறர்வாழ
ஊரிற் குழைத்தோன் எவனாம்? உயர் தமிழ்
மண்ணில் முளைத்த மறத்தமிழன் ஆகானோ?
உண்மை உரைத்தேன் உணராதோர் கேட்பின்
நிலவை, விரிவானே, நீள் கடலைத் தாண்டிப்
பலபொருளுங் கண்டோன் பழந்தமிழன் ஆகானோ?
இல்லை எனவுரைக்கும் என்பகைவர் என் நண்பர்