உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 மருந்தளித்து நோய்தீர்ப்பார் மருத்து வர்கள்: மனநோயை அன்னவரால் நீக்கப் போமோ? விருந்தளித்து நோய்தீர்ப்பார் உழவர்; நாட்டில் வேட்பாளர் வாக்குக்கு மிகுபொய் சொல்வார்; திருந்துதற்குத் தாம்கற்ற கல்வி கொண்டு சீர்திருத்தக் காரர் நல் லறிவைச் சொல்வார்; பொருத்தமுறக் கதைகட்டிச் சமயச் சான்ருேர் புளுகிடுவார். இவரெல்லாம் கலைஞர் ஆமோ? கோளுக்குக் கோளனுப்பும் இந்த நாளும், கும்மிருட்டில் வாழ்ந்திருந்த அந்த நாளும் நாளெல்லாம் உழைத்துழைத்து நலிவை ஏற்று நடைமுறைக்குத் தேவையான பொருளை யெல்லாம் தோளுழைப்பைத் தொழிலாளர் தருகின் ருர்கள்: துயர்மாற்றம் கண்டதுண்டோ? உழைத்துழைத்தே தோளயர்ந்து மனமயர்ந்து துடிக்கும் போழ்தில் துயர் மறக்கச் செய்வதியார்? கலைஞர் அன்ருே? அணிசெய்வோர், உழவுசெய்வோர், புளித்த மண்ணை அள்ளிவைத்து வனைந்தேமண் பாண்டம் செய்வோர், மணிசெய்வோர், வாழுகின்ற மக்கட் கூட்டம் மானத்தைக் காத்துடலை மறைக்கச் செய்யும் துணிநெய்வோர், ஆடையினைத் தூய்மை செய்வோர், துயருக்கு மாமருந்தாய் எந்த நாளும் பணிசெய்வோர் நற்கலைஞர் அவர்கள் இன்றேல் பாருலக வாழ்க்கையென்றும் பண்ப டாதே! கலைஞரை நாம் போற்றிடுவோம்; அவர்கள் இன்றேல் கார்சூழ்ந்த வானம்போல் தோன்றும் வாழ்க்கை1 கலைஞரைநாம் போற்றிடுவோம்; அவர்கள் இன்றேல் கருத்துட்டம் மக்களினம் அடைவதில்லை!