பக்கம்:பாட்டுத் திறன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix தோய்ந்து இன்பம் நுகரவிரும்பும் ஆர்வம் மிக்க தமிழ் ஆர்வலர் கட்கும் இந்நூல் வழிகாட்டியாக அமைதல் கூடும். காலத்திற்கேற்ற அரிய பல தமிழ் துரல்களை அழகிய முறை யில் வெளியிட்டு நீண்ட நாட்களாகத் தமிழ் பணி ஆற்றிவரும் பதிப்புச் செம்மல் திருகன. இராமநாதன் அவர்கள் (அதிபர், ஸ்டார் பிரசுரம், பெரியதெரு, திருவல்லிக்கேணி) இந்நூலை மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்காக அவருக்கும், நூலை நன் முறையில் அச்சிட்டுக் கற்போர் கரங்களில் கவினுடன் தவழச் செய்த பேராசிரியர் டாக்டர் சாலை இளந்திரையனுக்கும் (சாலை அச்சகம்) என் மனமுவந்த நன்றி என்றும் உரியது. இந்த நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித் தவர் என் கெழுதகை நண்பர் இளைஞர், டாக்டர் க. ப. அறவாணன். தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழ்ந்து கற்றவர். சென்னை பக்சையப்பன் கல்லூரி, சென்னை இலயோலா கல்லூரி இவற்றில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இடையில் சில ஆண்டுகள் செனகல் (ஆஃபிரிக்கா) நாட்டில் தமிழ் பரப்பித் தாய்நாடு திரும்பி தற்சமயம் புதுவைப் பல்கலைக் கழகம் தமிழியல் துறைத்தலைவராகப் பணியாற்றி வருபவர். உழைப்புக்கு அஞ்சாதவர். இவரது அயரா உழைப்பால் கவிஞர் சுப்பிரமணிய பாரதி பெயரால் தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் துறை சிறந்து பொலிய வேண்டும். இவரும் இவர்தம் துணை வியாரும் டாக்டர் பட்டம் பெறுவதிலும் புதுச் சேரிப் பணியில் சேர்வதிலும் இறையருளால் என் தொடர்பு ஏற்பட்டது. நல்லொழுக்கம், நற்பண்பு, கடமையுணர்வு இவை நிரம்பப் பெற்ற இந்த இளைஞர் அணிந்துரை என்றும் நினைவுகூரும். வகையில் என் நூலில் அமைந்தது, அணிந்துரை வழங்கிய அன்பருக்கு என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. இவர் மேன் மேலும் உழைக்கவும், அதற்கேற்ற உடல் நலமும் மன வளமும் நல்க என் இதயத்தில் நிரந்தரமாக இடம் பெற்று. இருக்கும் ஏழுமலையப்பனை நினைத்து வாழ்த்துகின்றேன். பேராசிரியர் மு. நடேசமுதலியார் நான் திருச்சி புனித சூசை யப்பர் கல்லூரியில் இடை நிலை வகுப்பில் பயின்ற காலத்தில் (1934.36) எனக்கு வாய்த்த பெரும் பேராசிரியர். என்பால் நல்லொழுக்கம், நற்பண்புகள், ஓயாது உழைக்கும் பண்பு, கடமையுணர்வு முதலியவை அமைவதற்கு முதற்காரணமாக இருந்தவர் இப்பெருமகனார். கவிதையில் ஆழங்கால் படுவதற்கும், கட்டுரைகள் நன்முறையில் எழுதுவதற்கும் நற்பயிற்சிகள் தந்து வாழ்த்தியவர். கட்டுரைப் பயிற்சிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/10&oldid=812232" இலிருந்து மீள்விக்கப்பட்டது