பாட்டுத் திறன் 89 அஃதாவது, பரிவு நரம்பு மண்டலம் இச் சுரப்பிகளை இயங்கச் செய்வதால் அவற்றிலிருந்து அதிகமாக வெளிப்படும் 'அட்ரெனின் குருதியோட்டத்தில் கலந்து உடல் முழுவதும் உணர்ச்சியலைகளை எதிரொலிக்கச் செய்கின்றன. உள்ளக்கிளர்ச்சியின் உள்ளுறுப்புப் பகுதிகளின் பெரும் பகுதி தன்னாட்சி நரம்புமண்டலத்தின் பிரிவாகிய பரிவு நரம்பு மண்டலத்தால் ஆதிக்கம் செலுத்தப் பெற்றுள்ளது என்பதில் ஐயமொன்றுமில்லை. அண்மைக்காலம் வரையிலும் துணைப் பரிவு நரம்பு மண்டலம் உள்ளக்கிளர்ச்சி ஏற்படும்பொழுது :அமைதியாகவே உள்ளது என்றே கருதப்பெற்றது. எனினும் உயிரியின் உள்ளக்கிளர்ச்சி துரண்டப்பெற்ற நிலையிலும் சில அமைப்புகள் துணைப்பரிவு நரம்புமண்டலத்தால் ஆதிக்கம் செலுத்தப்பெறுகின்றன என்பதை விலங்குகளின்மீது மேற் கொள்ளப்பெற்ற சில சோதனைகளால் அறிகின்றோம். ஆகவே, உள்ளக்கிளர்ச்சி பரிவு நரம்புமண்டலத்தால் தனிசிறப் படைகின்றது என்று சொல்லுவதைவிடத் தன்னாட்சி மண்ட லத்தால் தனிக்சிறப்படைகின்றது என்று கூறுவதே சிறந்தது என்றாகின்றது. மேற்பூத்தண்டு: தற்செயலாகவோ, அன்றி அறுவை மருத்துவத்தினாலோ பூத்தண்டு என்ற பகுதிக்கு ஊறு கேர்ங் தால், அது உள்ளக்கிளர்ச்சி நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்குகின்றது என்பதை நீண்ட காலமா கவே அறிந்திருந்தனர். சில சமயம் இதனால் தனியானிடம் உணர்ச்சியற்ற கிலை உண்டாகின்றது; சிலசமயம் உணர்ச்சி மிக்க நிலையும் ஏற்படுகின்றது. மேற்பூத்தண்டு கடுமையாக அடிபட்டுச் சிதைந்தால் உணர்ச்சியற்ற நிலை உண்டாகின்றது; மேற்பூத்தண்டிற்கும் பெருமூளையின் புறணிக்கும் பூத்தண்டு வழியாக உள்ள இணைப்புகள் மட்டிலும் அறுந்துபோய் மேற் பூத்தண்டு கெடாதிருந்தால் உணர்ச்சிமிக்க நிலை உண்டா கின்றது. புறணியின் தடுத்து நிறுத்தும் ஆற்றலை நீக்கிவிட்ட தனால் இங்கிலை ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்பதை உய்த் தறியலாம். இத்துறையில் மேற்கொள்ளப் பெற்ற சோதனை களும் இதே முடிவைக் காட்டுகின்றன. மேற்குறிப்பிட்ட சோதனைகள் மேற்பூத்தண்டு பெறும் பங்கினைப் பற்றி முழுமையும் தெளிவாக்கவில்லை. உள்ளக்
பக்கம்:பாட்டுத் திறன்.pdf/100
தோற்றம்