பக்கம்:பாட்டுத் திறன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 91 கடத்தையை நீடித்து நிலை நிறுத்துவதாகும். புறணி நீக்கப் பெற்ற பிராணியிடம் இவ்வித நடத்தை கின்று போகின்றது; ஆனால், சாதாரணப் பிராணியிடம் இது தொடர்ந்து நடை பெறுகின்றது, (4) பெருமூளையின் புறணி அகற்றப் பெற்றால் உள்ளக்கிளர்ச்சியின் உறைப்பு அதிகரிக்கின்றது. இந்த நான்கு சோதனை உண்மைகளிலிருந்தும் நாம் தெரிந்து கொள்வது: ஒன்று, பெருமூளை பிற நரப்பப் பொறி நுட்பங்களின் எதிர் வினைகளைத் தடுத்து அவற்றைத் தாமதப்படுத்துகின்றது. இரண்டு, உள்ளக்கிளர்ச்சி எதிர்வினைகளை விடுவிப்பதற்கு அது பெரும்பாலான தூண்டல்களைத் தருகின்றது. மேலும், அஃது உள்ளக்கிளர்ச்சி வெளியீடு எப்போழுது நடைபெற வேண்டும், எப்பொழுது நடைபெறக்கூடாது என்பதையும் அறுதியிடு கின்றது. அதனுடைய கட்டுப்பாடு தற்காலிகமாகத் தள்ளப் பெறும் அளவிற்கு அவசரம் அதிகமாக இருந்தாலன்றி இஃது அறுதியிடப் பெறுகின்றது. . கிளர்ச்சியூட்டும் உள்ளக்கிளர்ச்சியின்பொழுது உடலில் நேரிடும் சில எதிாவினைகள்: பரிவு நரம்பு மண்டலமும் துனைப் பரிவு நரம்பு மண்டலமும் ஒன்றற்கொன்று முரண்பட்ட செயல் களைப் புரிகின்றன என்பதை மேலே கண்டோம். சினம், அச்சம், துன்பம் போன்ற கிளர்ச்சியுறும் எல்லா உள்ளக் கிளர்ச்சிகளின்பொழுதும், உள்ளக்கிளர்ச்சிய ற்ற உடற் பயிற்சியின் பொழுதும், ஒரேவித கோலங்களைக் கொண்ட உடல் மாற்றங்களே நிகழ்கின்றன. எனவே கிளர்ச்சி தரும் ஒர் உள்ளக்கிளர்ச்சியின்பொழுது, செயலுக்குரிய இத்தகைய உடல் ஆயத்தங்கள் இருக்கும் என்று சொல்லலாம். இத்தகைய உடல் மாற்றங்கள் நிகழும் பொழுது நாம் ஒர் உள்ளக் கிளர்ச்சியினை எதிர்பார்க்கலாம் என்று சொல்ல மூடியாது. இனி, கிளர்ச்சி தரும் உள்ளக்கிளர்ச்சிகள் நிகழும்பொழுது இத்தகைய ஒரு சில மாற்றங்கள் யாவை என்பதைக் காண்போம். கிளர்ச்சிதரும் உள்ளக் கிளர்ச்சிகள் நடைபெறும்போழுது ஏற்படும் இத்தகைய மாற்றங்களில் சில தசைபற்றியவை; இவற்றில் இதயமும் குருதி வட்டமும், சுவாசித்தலும், உணவுக் குழல் சுருங்குதல்களும் சம்பந்தப்பட்டவை. இன்னும் சில வற்றில் சுரப்பிகள் சாறுகள் சுரத்தலும், வேறு சிலவற்றில்