பக்கம்:பாட்டுத் திறன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாட்டுத் திறன் குருதியில் சில வேதியியல் மாற்றங்கள் நடைபெறுதலும் சம்பந்தப்பட்டவை. குருதியோட்டத்தில் மாற்றங்கள் : கிளர்ச்சி ஏற்படுங்கால் இதயம் அதிக நாடித் துடிப்பினாலும் ஒவ்வொரு நாடித் துடிப் பின் அதிகமான வீச்சினாலும் குருதியோட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவை இரண்டும் எப்பொழுதும் சேர்ந்தாற்போல் அதிகரிப்பதில்லை. திடுக்கிடச் செய்யும் அாண்டல் முதலில் வலிவற்ற, வேகமான நாடித் துடிப்பை ஒருகணத்தில் உண்டாக்கும்; அதன் பிறகு வன்மையான, வேக மான நாடித் துடிப்பைச் சிறிது நேரம் உண்டாக்கும்; அல்லது, அது வன்மையான- ஆனால் மெதுவான-வேகத்தையும் விளைவித்தல் கூடும். குருதியோட்டத்தைப் பாதிக்கக்கூடிய வேறொரு தசை மாற்றமும் உண்டு. பாய்குழல்’சுவர்களின் மிகச் சிறிய தசைகள் சுருங்கி அல்லது விரிந்து குருதியோட்டத்தைப் பாதிக்கின்றன. பரிவுத் தாண்டல் உள்ளுறுப்புகளிலுள்ள பாய்குழல்களைச் சுருங்கச் செய்து வெளிப்புறத்திலுள்ள தசைகட்குக் குருதியைப் பாய்ந்தோடச் செய்து குருதி யமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. வன்மையான காடித் துடிப்பினாலும் குருதியமுக்கம் அதிகரிக்கின்றது. மேலும், கம்பத் தகுந்தவாறு சோடித்துக் கூறும் கட்டுக் கதையாலும், அறிவியல் சோதனையை எழுதுவதாலும் காதல் சம்பந்தமான படக்காட்சிகளைப் பார்ப்ப தாலும், மின் அதிர்ச்சிகளைப் பெறுவதாலும்-இன்னோரன்ன கிளர்ச்சிகளாலும் குருதியமுக்கம் மிகுகின்றது. அதிகமான இறுக்கத்தின் அடியில் எழும் உள்ளக் கிளர்ச்சி மிக்க மக்கள் தம்முடைய குருதியமுக்கத்தை உயர்த்தி அதை உயர்ந்த நிலையி லேயே வைக்கின்றனர். கவீன வாழ்க்கையின் காரணமாக அளவுக்கு மீறிப் பாய்குழல்கள் செயற்படுவதால் குறுகிய காலத்திலேயே மக்கள் வாணாளை இழக்கின்றனர். குருதிய முக்கச் சோதனையின் பொழுது உள்ளக்கிளர்ச்சி இறுக்கம் இருப்பின், வழக்கமாகவுள்ள குருதி யமுக்கத்தைப் பற்றித் தவறான கருத்தைத் தருகின்றது. 27 நாடித்துடிப்பு - Pulse, 28. வீச்சு - Amplitudę 29. u iG psb - Artery.