பக்கம்:பாட்டுத் திறன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 93 சுவாசித்தலில் மாற்றங்கள் : உள்ளக் கிளர்ச்சிகள் பல்வேறு விதங்களில் சுவாசித்தலின் தாள இயக்கத்தைத்'தடைப்படுத்து கின்றன. கிளர்ச்சி, சுவாசித்தலின் வேகத்தையும் அதிகப்படுத்த லாம்: இது மேற்கொள்ளப்பெறும் செயலைப்பொறுத்தது. திடுக் கிடச் செய்யும் தூண்டல்கள் சுவாசித்தலை அதிகரிக்கின்றன. துக்கம், சோர்வு, மனப் போராட்டங்கள் ஆகியவை சுவாசித் தலின் வீச்சினைக் குறைக்கத் தொடங்குகின்றன; இது அடிக்கடி நிகழும் ஆழ்ந்த மூச்சினால் ஈடுசெய்யப்பெறுதல் வேண்டும். தொடர்ந்தாற்போல் தொந்தரவினைத் தரும் தூண்டல்கள் வழக்கமாகச் சுவாசித்தலின் தாள இயக்கத்தில் ஓர் ஒழுங் கின்மையை உண்டாக்குகின்றன. - உணவுக் குழலில் மாற்றங்கள் : பரிவுக் கிளர்ச்சி, சாதாரண மாக நடை பெறும் செரிமானத்தையும் தடுத்துவிடுகின்றது. உமிழ்நீர் சுரப்பதும் கின்று விடுகின்றது. இதன் காரணமாகவே பயந்த மனிதரின் வாய் உலர்ந்து போகின்றது; அவருடைய நாக்கு மரக்கட்டை போலாகி விடுகின்றது. இந்த உமிழ்நீர்ச் செயலின் அடிப்படையில் சீன நாட்டில் ஒரு பழக்கம் ஏற்பட்டி ருந்ததாகச் சொல்லப்பெறுகின்றது. அஃதாவது, குற்ற வழக் கொன்றில் ஐயப்பட்டுக் குற்றம் சாற்றப்பெற்றவர்கள் அனை வரையும் ஒருங்கு கூடும்படி செய்து ஒவ்வொருவருக்கும் சிறிது அரிசிகொடுத்து வாயில்வைத்துக் கொண்டிருக்கும்படி சொல்வது. சிறிது நேரங்கழித்து அரிசியை உமிழும்படி செய்து அது சோதிக்கப்பெற்றது. ஒருவருடைய வாயிலிருந்த அரிசிமட்டிலும் 'உலர்ந்திருந்தமையால் அவர் குற்றவாளியெனத் தீர்மானிக்கப் பெற்றார். - அகட்டு நீரும் பிற சுரப்புநீர்களும் சுரப்பது கிற்கத் தொடங்குகின்றன. ஒருவித தாள இயக்கத்தில் வயிறு விரிந்து சுருங்குவதும் கின்றுபோகின்றது; உள்ளக்கிளர்ச்சி ஏற்பட்டுச் சில மணித்துளிகள் வரையிலும் இங்கிலை தொடர்ந்து நிலவுகின்றது. இதைப் புதிர்க்கதிரைக்' கொண்டு கண்டறிய லாம். கம்மிடம் கன்றாகப் பழகின ஒரு பூனைக்குப் புதிர்க் கதிர் ஊடுருவாத பொருளைக் கொண்ட உணவினைக் 30. சுவாசித்தலின் தாள auto-Breathing rhythm, 81. புதிர்க்கதிர்-X-ray.