பக்கம்:பாட்டுத் திறன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 95 இச்சாறு பாய்ந்ததும் தசைகள் எல்லாம்சுறுசுறுப்பாகமுறுக்கேறி நிற்கின்றன; இதயம் விரைந்து துடிக்கின்றது; நுரையீரலும் விரைந்து மூச்சு விடுகின்றது; களைப்பு நீங்குகின்றது. மண்ணிரல், கல்லீரல், குடல் முதலியவற்றில் அடைபட்டுக் கிடக்கும் குருதி வயிற்றிலிருந்து உடலெங்கும் பாய்கின்றது. உடற்குடு மிகுதியாகின்றது. மயிர்க்கூச்செறிதலை நாம் காண் கின்றோம். கல்லீரலில் அடங்கிக் கிடக்கும் கன்னற்குழம்பு குருதியில் பாய்கின்றது. தோல் முழுவதும் நெய்ப்பசை பரவு கின்றது. குருதியும் விரைந்து உறைந்து போகும்படியான நிலைமையில் உள்ளது. இச்சமயத்தில் 5ம் ஆற்றலுக்கு அப்பாற் பட்ட செயல்களையும் கிறைவேற்றிவிடுகின்றோம். உள்ளக்கிளர்ச்சியின் பிற அறிகுறிகள் : அச்சம் அல்லது வெகுளியின் காரணமாக மேலே குறிப்பிட்ட பூனையின் மயிர் கூச்செறிகின்றது. மானிட உடலிலுள்ள தசையும் அதே துலங் கலைப் பெறுகின்றது. பரிவு நரம்புகளின் தூண்டலால் கண்ணின் பாவை (pupil) விரிவடைகின்றது. வியர்வைச் சுரப்பி கள் இங்ங்னமே கிளர்ந்தெழுகின்றன; உறைப்பான உள்ளக் கிளர்ச்சி ஏற்படும்பொழுது தோலின்மீது வியர்வைத் துளிகள் முத்துகள்போல் அரும்புகின்றன. சில கணங்களே நிகழக்கூடிய சினம், வியப்பு, நாணம் போன்ற உணர்ச்சிகள் ஏற்பட்டாலும், வியர்வைச் சுரப்பிகள் பரிவு நரம்புகளால் சிறிதளவு தூண்டப் பெற்றுத் தோலின் மீதுள்ள மின்னாற்றல் நிலையில் ஒரு சிறு பொழுது மாற்றத்தை விளைவிக்கின்றது. இம்மாற்றத்தை ஒரு மின்னோட்ட மானியால்" பதிவு செய்யலாம். இஃது உள் மின்னோட்ட மறிவினை' என வழங்கப்பெறுகின்றது. இந்த மின்னோட்ட மாற்றத்தால் பரிவு நரம்புகளில் ஏற்படும் மிகச் சிறிய செயலையும் நுட்பமாக அறிந்துகொள்ள முடியும். நமது உடலில் இதைக் காண்பதற்கேற்ற இடம் உள்ளங்கையே. இதுபற்றிய விவரங்கள் உள நூல்களில் நன்கு விளக்கப் பெற்றுள்ளன. ஆண்டுக் கண்டுகொள்க." 85. ι$ sirosr r í p $ $ $o æ-Electrical condition. 36. 18 gir@ sorrill... ao x giii-Galvanometer. 31. உன் மின்னோட்ட மறிவினை -Psycho-galvanic Reflex. 38 Guilford, J. P.: General Psychology pp. 314-15