பக்கம்:பாட்டுத் திறன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாட்டுத் திறன் யின்மேல் விழுகின்றது; கண்ணாடி உடையவே வேலைவாங்கும தொழிற்கூடத் தலைவர் அவன்மீது எரிந்து விழுகின்றார்; பல வகையாகத் தொந்தரவு செய்கின்றார்; இவனும் வெந்து வெகுள் கின்றான். மாலையானதும் அவன் வீடு திரும்புகின்றான். இளைஞனது வெகுட்சி தணிந்தன்றோ இருத்தல் வேண்டும். ஆனால், வெகுட்சி நிலை இன்னும் மாறியபாடில்லை. வீட்டிற்கு வந்ததும் இவன் அன்னை இவனது முகவாட்டத்தைக் கண்டு, 'ஏனப்பா ஒருவிதமாக இருக்கின்றாய்?' என்று அன்போடு பரிந்து கேட்கின்றாள். வெகுட்சி நிலை மாறாததால் இவன் அவள்மேல் எரிந்து விழுகின்றான். இதுவே பின்னிலை உள்ளக் கிளர்ச்சியின் இயல்பு. உருள்கின்ற மணிவட்டு உருளும் பொழுதே சிறிது துரந்தாலும் அது மேலுருண்டு செல்லு மன்றோ? அங்கிலையே பின்னிலை உள்ளக்கிளர்ச்சியிலும் காணப்பெறுகின்றது. ஒரு தனியாளிடம் கிலைத்துள்ள உள்ளக்கிளர்ச்சியுள்ள மனங்லையையே" உட்பாட்டு கிலை' என்றும் கருதலாம். மகிழ்ச்சியை நோக்கி நிற்கும் மனநிலை, அச்சத்தை நோக்கி கிற்கும் மனங்லை, வெருவியோடும் மனநிலை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இவை யாவும் ஓர் அளவுக்குள் அடங்குவன. இவையே மீப்பண்புகளாக' கிலைத்து கிற்கின்றன. சில உட்பாட்டு நிலைகள் உளச்செயலைத் துரிதப்படுத்தும்; சில கிலைகள் அதனை மெதுவாக நடைபெறவும் செய்துவிடும். உற்சாகமான உட்பாட்டு சிலைக்கும். சோர்வான உட்பாட்டு கிலைக்கும் ஒருவரது உடல்நலம் ஒரளவு காரணமாகலாம்; ஆனால், அவை அதிகமாக ஒரு குறிக்கோளை அடைவதில் பெறும் வெற்றி அல்லது தோல்வியையே சார்ந்து சிற்கின்றன; அல்லது முரண்பாடு"களைச் சமாளிப்பதையும் பொறுத் துள்ளன. ஒருவர் கவிதைகளைப் படித்துச் சுவைப்பது இத்தகைய உட்பாட்டு நிலையை ஒரளவு பொருத்துள்ளது என்பதை அனுபவத்தில் நாம் அறியலாம். . மீப்பண்பு : ஒரு மனிதனுடைய உள்ளக் கிளர்ச்சிகள், அவற்றைத் தாண்டுவதற்கான தூண்டல்களை அவன் ஏற்கும் 46. In organ se - Disposition, 47. Răusăru - Temperament. 48. aprsirurg - Conflict,