பக்கம்:பாட்டுத் திறன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 பாட்டுத் திறன் தள்ளிக்கொண்டால், துக்கமே உண்டாவதில்லை என்று கூறப் பெறுகின்றது. ஆனால், ஒரு குறிப்பிட்ட உள்ளக்கிளர்ச்சிக் குரிய உடற்கோலத்தை ஒருவர் மேற்கொள்வாராயின், அவர் அந்த உள்ளக்கிளர்ச்சிக்குத் தூண்டப் பெறுகின்றார். தக்க உடற் கோலங்களை மேற்கொண்டு நடித்தால் சரியான உள்ளக் கிளர்ச்சிகளுடன் கல்லமுறையில் கடிக்க முடிகின்றதென்று நடிகர்கள் கூறுவதாக ஜேம்ஸ் நமக்குத் தெரிவிப்பார். மேலும் அவர், நீங்கள் துய்த்த ஓர் உள்ளக்கிளர்ச்சியை நினைவுகூர்ந்து உள்நோக்கி கன்கு ஆராயுங்கள். அங்கு எழுந்த உடனிலை யின் உணர்ச்சியை அடியோடு மறந்துவிடுங்கள். மிகுதி கிற்பது ஏதேனும் உண்டோ? ஊன்றி நோக்குங்கள்’ என்று ஆராய்ச்சி செய்ய நமக்கு வழிகாட்டுவர். இதயத்துடிப்பு. தொண்டை உலர் தல், மேலாக உயிர்த்தல், கைகால் வாயிதழ் இவற்றின் நடுக்கம், தோலின் உட்கூச்சம், கால் கை விட்டுப்போதல்போல் தோன்று தல், வயிற்றுக் குழப்பம்-இவற்றை நீக்கிவிட்டால் அச்சம் என்பது என்ன? ஒன்றுமில்லையன்றோ! உடல்சிலை புலனா தலை நீக்கினால் உள்ளக் கிளர்ச்சி புலனாவதில்லை என்று ஜேம்ஸ் தமது நுகர்ச்சியை வெளியிடுவார். ஜேம்ஸும் லாங்கும் கிறுவிய கொள்கை கமக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், அதில் உண்மை இல்லாமல் இல்லை. நாம் ஒரு பாம்பினைக் கண்டு வெருவியோடுவதற்குப் பதிலாக, அதனை அடிக்க முயன்றால், நாம் துய்க்கும் உள்ளக்கிளர்ச்ஓ உண்மையில் அச்சம் அன்று. அத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் அடையும் உள்ளக்கிளர்ச்சி சினமாகும்; அஃது அச்சம் சிறிது கலந்த சினமாகும். மேலும், அதிகமாக வெருவியோட ஒட, அச்ச உணர்ச்சியின் உறைப்பும் அதிகமாகின்றது. இத்தகைய கம்முடைய அனுபவங்கள் இக்கொள்கையை மேலும் உறுதிப் படுத்துகின்றன. இக்கொள்கை, பல உளவியலறிஞர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து அவர்களை இதனை மெய்ப்பிக்கும் பல சோதனைகளை மேற்கொள்ளும்படி செய்தது. பல மருத்துவ கிலைய உற்று கோக்கல்களும் சோதனை உண்மைகளும் இக் கொள்கைக்கு முரண்பட்ட கிலையில் எழுந்தன. இதனால் இக் கொள்கை உள்ளக் கிளர்ச்சியை முற்றிலும் விளக்கும் ஒரு கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பெறுவதில்லை, நரம்புபற்றிய