உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டுத் திறன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 10? சில நோய்களால் பிடிக்கப்பெற்றவர்கள் சில இணைக்கும் நரம்பு கள் கெட்டுவிட்டதால் உள்ளக்கிளர்ச்சிகளுடன் இயல்பாக எழும் உடல் மாற்றங்களை உணரமுடிகின்றதில்லை. இங்கிலை யில் நோயாளர்கள் தாம் துய்க்கும் உள்ளக்கிளர்ச்சிகளைக் கூறு கின்றனர். ஜேம்ஸ்-லாங்க் கொள்கை உண்மையாயின், தங்கள் உடலில் நிகழும் மாற்றங்களைத் தாங்கள் உணரமுடியாததால், அவர்கள் உள்ளக்கிளர்ச்சி அனுபவத்தையும் உணரமுடியாத நிலையிலிருத்தல் வேண்டும். இதற்கு எதிர்மாறாகச் சில உள நோய்கள் உள்ளன. அங் நோய்களால் பீடிக்கப்பெற்றவர் களிடம் தக்க உள்ளக் கிளர்ச்சியின்றியே இயல்பிகந்த சிரிப்பு அல்லது அழுகைக் குறிகள் காணப்பெறுகின்றன. இங்கிலை யிலும் இக்கொள்கை தவறுகின்றது. இத்தகைய மருத்துவ உற்றுநோக்கல்களைச் சில பிராணிகளைக் கொண்டு கானானும்' ஷெர்ரிங்க்டனும் சோதனைகள் வாயிலாகவும் மெய்ப்பித்துள் ÇoróðTss, உள்ளக்கிளர்ச்சி என்பது உடல்நிலை உணர்ச்சியைத் தவிர வேறொன்றுமல்ல என்ற கருதுகோளை" மெய்ப்பிப்பதற்கு ஷெர்ரிங்க்டன் என்பார் ஒரு நாயின் முக்கிய உள்ளுறுப்புகளி னின்றும் அதன் மூளையை அடையும் நரம்பு கார்களை வெட் டினார். இதனால் அதன் உள்ளுறுப்புகளில் நேரிடும் சில உடல் மாற்றங்களை அந் நாயினால் உணர முடியாது. ஆயினும், அச் சோதனைநாய் சில உள்ளக்கிளர்ச்சி நடத்தைக் கோலங்களைக் காட்டியது. அது அதன் சினத்தை எழுப்பிய மனிதரை நோக்கிக் குலைத்தது; அன்பினைக் காட்டிய மனிதரிடம் வாலைக் குல்ைத்து மகிழ்ச்சியைப் புலப்படுத்தியது. ஆனால், ஷெர்ரிங்க் டனின் இச் சான்றினைமட்டிலும் அடிப்படையாகக் கொண்டு இக் கொள்கையைத் தள்ளிவிட முடியாது. காரணம், உள்ளு றுப்புகளில் நிகழும் உடல் மாற்றங்களால்மட்டிலும் உள்ளு ணர்ச்சி அநுபவம் ஏற்படுவதில்லை. மேலும், அப்பிராணி உண்மையாக ஏதாவது உள்ளக்கிளர்ச்சி அநுபவத்தைப் பெற்றதா, அல்லது அதன் உள்ளக்கிளர்ச்சிக் கோலம் ஒரு பொய்த்தோற்றமா என்பதை அறுதியிடுவது சாத்தியமில்லை. கானான் என்பார் மேலும் ஒருபடி முன் சென்றார், அவர் ஒரு 13. Qui so:3 * #ğ-Abnormal. 14. srst w śr-Cannon. 15, Goiásá-or-Sherrington 16, 2&sagaro-Hypothesis,