பக்கம்:பாட்டுத் திறன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 109 களுக்குச் சிறப்பியல்பாகவுள்ள உடல்நிலையைச் செயற்கை முறையில் உண்டாக்கினால் என்ன நேரிடும்? மிக விரிந்த நிலை யில் உள்ளுறுப்புகளிலும் என்புத் தசைகளிலும் மாற்றங்களை யுண்டாக்கும் அட்ரெனினை உடலில் குத்திப் புகுத்தி விளைவு களைச் சோதித்தனர். விரைவான காடித்துடிப்பு, வேர்க்கும் கைகள், கால் கை குரல் நடுக்கம் போன்ற திட்டமான உடற் குறிப்புகள் நிகழ்கின்றன என்பதைக் கண்டனர். சோதனைக்குட் பட்டவர்கள், ஏதாவது ஆட்டப்பந்தயத்தில் பங்குகொள்வதற்கு முன் துடிப்புடனும், கிளாச்சியுடனும் இருப்பது போன்ற நிலை தங்கட்கு ஏற்படுவதாகக் கூறுவர். ஆனால், அவர்களிடம் உண்மையான உள்ளக்கிளர்ச்சி ஏற்படவில்லை என்றும், பொய்த்தோற்றமான கிளர்ச்சி நிலையே அவர்களிடம் உண்டா கின்றது என்றும் நாம் அறிகின்றோம். இச்சான்றும் ஜேம்ஸ்லாங்க் கொள்கைக்கு விரோதமாகவே உள்ளது. மேற்பூத்தண்டுக் கொள்கை : இக் கொள்கைப்படி உள்ளக் கிளர்ச்சி ஆபவமும் உள்ளக்கிளர்ச்சி நடத்தையும் தனித்தனி யாக ஒன்றோடொன்று சாராமல் நடைபெறுகின்றன. இந்த இரண்டு செயல்களும் மேற்பூத்தண்டின் செயல்களால் தனித்தனி யாகத் துண்டப் பெறுகின்றன. டபிள்யூ. பி கானான்' என் பாரும், பி. பார்டு' என்பாரும் ஒரு நாயின் மூளையின் பல்வேறு பகுதிகளை அறுவை முறைகளால் நீக்கி மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளக்கிளர்ச்சிகளுக்குப் பொறுப் பாக அமைந்துள்ளதா என்று ஆராய்ந்தனர். அஃதாவது, உள்ளக்கிளர்ச்சிகளை மூளைக்கு மட்டிலும் உரியனவாகக் கூறமுடியுமா என்று காணமுனைந்தனர். அத்தகைய ஒரு மையம் மூளையிலிருந்து, அதனை நாம் நீக்கி விட்டால் அப் பிராணிக்கு எவ்வித உள்ளக் கிளர்ச்சியையும் துய்த்தல் முடியாத நிலை ஏற்படவேண்டும். மேற் பூத்தண்டு நீக்கப்பெற்றால், அப்பிராணி உள்ளக்கிளர்ச்சி பற்றிய எதிர் வினைகளைப் புரிய முடிவதில்லை. ஆனால், புறணி மையங்களை அகற்றுவதால் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதில்லை. இதனால் அந்த ஆய்வாளர்கள் உடல் மாறுதல்களுடன் கூடிய உள்ளக்கிளர்ச்சி நடத்தைக் கோலமும் உணர்ச்சி வேகங்களும் மேற்பூத்தண்டு செயற்படுவதால் சேர்ந்தாற்போல் தூண்டப் 18, டபிள்யூ. பி. கானான் W. B. Cannon. i8. 3. Lori G = P. Bard,