பக்கம்:பாட்டுத் திறன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாட்டுத் திறன் பெறுகின்றன என்ற கொள்கையை நிறுவினர். இதனை ஒரு விளக்கப் படத்தைக்கொண்டு (படம்-6) தெளிவாக்கலாம். இக் கொள்கைப்படி புலனுணர் உள்துடிப்புகள் (எண்-1 எண்-1 ஆல் காட்டப் பெற்றுள்ளவை) புறணியை அடைவதற்குமுன் பூத்தண்டுவழியாகச் செல்லும்பொழுது மேற்பூத்தண்டின் திட்ட மான கோலங்களை எழுப்புகின்றன. இவை பிறவியிலேயும் அமைந்துள்ளன; பழக்கத்தாலும் ஏற்படுகின்றன. மேற் பூத்தண்டிலிருந்து தோன்றும் உள்துடிப்புகள் உடனே ஒரே சமயத்தில் புறணிக்கும் (எண்-4வழியாக) உள்ளுறுப்புகளுக்கும் பெருமூளையின் புறணி م என்புத் தசைகள் படம்:ேமேற்பூத்தண்டுக் கொள்கையினை விளக்குவது. என்புத்தசைகளுக்கும் (எண்-3 வழியாக) செல்லுகின்றன. எண்-3 என்ற வழி புறணி - பூத்தண்டு வழியை உணர்த்துகின்றது. இதிலிருந்து செல்லும் உள்துடிப்பு கள் மேற்பூத்தண்டின் செயல்களைத் தடைசெய்கின்றன. பெரு மூளையின் புறணி உண்மையான அல்லது கற்பனையான இக்கட்டு நிலையை உணர்கின்றது; உடனே அது மேற்பூத் தண்டினைத் தாண்டுகின்றது. மேற்பூத்தண்டு அதற்குப் பொருத்தமான உள்ளக்கிளர்ச்சியுடன் எதிர்வினை புரிகின்றது;