பக்கம்:பாட்டுத் திறன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத்திறன் 111 மேலும், அஃது உள்ளுறுப்புகட்கு உள்துடிப்புகளை அனுப்பி அவற்றில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஏற்கனவே நாம் மேற்பூத்தண்டு உள்ளக்கிளர்ச்சி அநுபவத்திலும், தன்னாட்சி நரம்பு மண்டலம் செயற்படுவதிலும் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறிவோம். இக் கொள்கையும் ஜேம்ஸ்-லாங்க்- கொள்கையும் உள்ளக் கிளர்ச்சியைக் கிளப்பும் உள்துடிப்புக்கள் பெருமூளையின் புறணியினின்றும் கிளம்பலாம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுகின்றன. சிந்தனைச்செயல்கள் உள்ளக்கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்பொழுது இத் துரண்டல்கள் எழுகின்றன. மேற்பூத்தண்டுக் கொள்கை ஜேம்ஸ்-லாங்க் கொள்கையின் இயல்பான இக்கட்டுகளைச் சமாளிக்கின்றது. கழுத்துப்பகுதி யிலுள்ள முதுகு நடுநரம்பின் பகுதியைத் துண்டித்தலால் மேற்பூத்தண்டு புறணிக்குச் செலுத்தும் தாண்டலுக்குக் குறுக்கீடு ஒன்றும் இல்லை; அதனால் உள்ளக்கிளர்ச்சி அநுபவம் நடைபெறுகின்றது. அட்ரெனினைக் குத்திப் புகுத்துவதால் அஃது உள்ளுறுப்பு, எதிர்வினைகளைத் துண்டுகிறது: ஆனால், அது மேற்பூத்தண்டின் துாண்டலுக்குக் காரணமாக அமைவதில்லை. உள்ளுறுப்பு, என்புத்தசைகளின் எதிர்வினை கள் ஒவ்வொரு உள்ளக்கிளர்ச்சிக்கும் ஒன்றாகத் தனித்தனியான கோலங்களில் அமைவதில்லை; இஃது இக் கொள்கைக்கு யாதொரு சங்கடத்தையும் விளைவிப்பதில்லை. இக் கொள்கை உள்ளக்கிளர்ச்சி யநுபவம் மேற்பூத்தண்டுத் தாண்டலால் நடைபெறுகின்றது என்றும்,உள்ளுறுப்பு அல்லது என்புத்தசை களின் செயல்களால் நடைபெறவில்லை என்றும் கூறுகின்றது. உள்ளுறுப்புகள் ஒப்புமை சார்ந்த முறையில்" உணர்ச்சி யற்றும் எதிர்வினைபுரிவதில் மெதுவாகவும் உள்ளன என்ற உண்மையை இக் கொள்கையைப் பொறுத்த மட்டிலும் கணக் கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. காரணம் உள்ளக் கிளர்ச்சி யநுபவம் தானாகவே எழுப்பப்பெறுகின்றது. மேற்பூத்தண்டின் செயல்களை யொட்டி மேற்கூறிய உண்மைகளில் கம் கவனத்தைத் திருப்பினால், மேற்பூத்தண்டுக் 20. ஒப்புமை சார்ந்த-Relatively.