பக்கம்:பாட்டுத் திறன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாட்டுத் திறன் கொள்கை தீவிரமான சங்கடத்துக்குள்ளாகின்றது. முதலாவ தாக, மேற்பூத்தண்டைத் தூண்டுவதால் உண்டாகும் உள்ளக் கிளர்ச்சி நடத்தை இயல்பாக எழுப்பப்பெறும் உள்ளக்கிளர்ச்சி நடத்தையைவிட ஒரு கிகழ்ச்சியை நோக்கிச் சரியாக அமைவ தில்லை; அது மிகவும் கட்டுப்பாடுள்ளதாகவும், அற்ப ஆயுளை யுடையதாகவும் உள்ளது. இதிலிருந்து மேற்பூத்தண்டுடன் நரம்புமண்டலத்தின் சில பகுதிகளும் சேர்ந்து குறிப்பிடத்தக்க முறையில் தொடர்புகொண்டுள்ளன என்பதுபெறப்படுகின்றது. உள்ளக்கிளர்ச்சியைத் தூண்டும் நிலைமைகளை அனுசரிக்கும் முறையில், பெருமூளையின் புறணி மிகவும் முக்கியமானது. இரண்டாவதாக, மேலே கூறியவாறு மேற்பூத்தண்டின் செயல் கள் உள்ளக்கிளர்ச்சி யதுபவத்திற்குத் துணைசெய்கின்றன என்பதற்கு கம்பத்தகுந்த சான்று ஒன்றும் இல்லை. வாட்சனின் கொள்கை : ஜே பி. வாட்சன்’ என்பார் உள்ளக் கிளர்ச்சி என்பது குடிவழியாக வரும் எதிர்வினைக்கோலம் என்றும், அதில் உடற்பொறி நுட்ப முழுவதிலும், குறிப்பாக உள்ள ஆழ்ந்த உணர்ச்சியுள்ள மாற்றங்கள் பங்குபெறுகின்றன என்றும் கூறுவர். வாட்சன் கனவு’ என்பதையும், சாதாரண மாக நாம் கூறும் கனவு கிலை உணர்ச்சிகளையும் அநுபவங்களையும் மறுப்பர். எனவே, அவர் உடல் மாற்றங் களோடு கூடிய கனவு நிலை யநுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜேம்ஸ் அல்லது கானானின் விளக்கங்களை ஒப்புக் கொள்வதில்லை. கனவுபற்றி வரும் அனைத்தையும் மறுக்கும் தம்முடைய கட்சியினரின் அடிப்படைக் கோட்பாட்டிற்குப்’ பொருத்தமாக, உள்ளக்கிளர்ச்சிகளை உடல்மாற்றங்களுக்குச் சமமாகப் பேசுவர். இக் கொள்கைக்கு இரண்டு மறுப்புகள் உள்ளன. முதலாவதாக, ஒர் உள்ளக்கிளர்ச்சி அநுபவத்தோடு தொடர்புள்ள குழப்பமான உணர்ச்சிகளைப் புறக்கணித்து உண்மைகளை மறுப்பதே இக் கொள்கையாகும். இரண்டாவ தாக உள்ளக் கிளர்ச்சி உடல்மாற்றங்களேயன்றி வேறொன்று மில்லை என்றால், பல்வேறுவித உள்ளக் கிளர்ச்சிகள் ஒவ்வொன்றற்கும் பல்வேறுவித தெளிவான உடல் மாற்றக் 21. Ge. 3. sure-os-J. B. Watson 22. Foral-Consciousness. 28, Gost ourg-Doctrine