உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டுத் திறன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 117 அவனுக்கே யன்றி அஞ்சி ஓடிவரும் அவனைக் கண்ட ஏனையோர்க்கும் நன்கு புலனாவன. குறிப்பும் சுவை யுணர்வும் ஆகிய ஏனையவை அவன் மன நிகழ்ச்சிகளாகும். அச்சமுற்றான் மனத்தே நிகழும் அச்சம், அவனுடம்பில் தோன்றும் கடுக்கம், வியர்த்தல் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுக் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று' என்பர் இளம்பூரணர்." மெய்-உடம்பு; படுதல் - தோன்றுதல். படு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு கின்றது. 'உய்ப்போன் செய்தது காணபோர்க் கெய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே' என்ற செயிற்றியனார் கூற்று ஈண்டுச் சிந்திக்கற்பாலது. அச்ச முற்றான் மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்பார்க்கும் புலனாகுக் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். கூத்தினுள் பயன்படக்கூடிய இவ் விலக்கணம், செய்யுள் செய்யுங்கால் சுவைபடச் செய்யவேண்டு தலின், இயற்றமிழிலும் மேற்கொள்ளப்பெறுகின்றது என்று குறிப்பிடுவர் இளம்பூரணர். இவ்வுலகிலுள்ள பொருள்களை முதல், கரு, உரி எனப் பாகுபாடு உணர்த்திய தொல்காப்பியர் ஒப்பு, உரு. வெறுப்பு போன்ற சொற்களால் உணர்த்தப் பெறும் நெஞ்சுகொளின் அல்லது காட்டலாகாப் பொருள்களை' மனத்தினால் உய்த்துணர வேண்டுமேயன்றி அவற்றின் வடிவத்தைப் பொறி களால் தானும் உணர்ந்து பிறர்க்கும் தெரியக் காட்டமுடியாது என்றும், இவை பிழம்பில் பொருள்கள் என்றும் கூறுவர். இறையனார் களவியலுரையாசிரியர் இவற்றை உண்மை மாத்திர முணர்த்திப் பிழம்பு உணர்த்தப் படாதன' என்று அடக்கிக் காட்டுவர். இத்தகைய பொருள்களும் பொறிகளின் வாயிலாக மனங்கொள்ளுவதற்கு ஏதுவான மெய்ப்பாடுகளாகும். எனவே, மக்களது அகவாழ்வும், புறவாழ்வும், ஆகிய உலகியல் வழக்கிலே புலப்பட்டுத் தோன்றும் இம் மெய்ப் பாடுகளைப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கிற்கும், 34. மெய்ப்பாட்டியல் - துன ற் பா. 3: இன் உ ை . 35. பொருளியல் நூற்பா.51. (இளம்பூரணர் உரை)