பக்கம்:பாட்டுத் திறன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 பாட்டுத் திறன் பெளதிகப் பண்பினைக் குறிப்பிடுகின்றதா? அஃது எண்ணமா? அன்றிப் பொருளா? என்பனபோன்ற வினாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. பாலார்டு என்ற அறிஞர் அச்சொல் இரண்டையும் குறிக்கின்றதாகவே கருதுவர். ஒவ்வொரு சொல்லுக்கும் இவ்வுண்மை பொருந்தும். குறியீடாக iன்று பொருளுணர்த்துங்கால் அஃது இரண்டு போக்குகளைக் கொள் கின்றது. ஒருபோக்கு மனச்செயலை உணர்த்த, மற்றொன்று புற உலகுடன் பொருந்திய உண்மையதுபவத்தை உணர்த்து கின்றது. ஒரு சொல் ஒரு தூண்டலாகக கருதப்பெறின், அதன் தனிப்பட்ட பொருள் என்பது அத் தூண்டலை யொட்டி எழும் உளத்துலங்கலாகும். அத் துலங்கல் உண்மையுலகிலுள்ள ஒருசில பொருள்களை மேற்கொண்டே இருக்கும். இவை யாவும் பொருள்கள். உறவுகள், நிகழ்ச்சிகள், வெற்றுணர் கருத்துகள், புலனிடான செய்திகள் போன்றவற்றைச் சார்ந்தே கிற்கும். இச்சொல் குறிக்கும் பொருள் அம் மொழி பேசும் மக்களனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். இப்பொருள் அகராதி, நாட்டின் இலக்கியம் போன்ற சாதனங் களால் ஓரளவு நிலைபெறுமாறு செய்யப்பெறினும், அஃது என்றுமே மாறாதிருக்கும் என்று உறுதியாகக் கொள்வதற் கில்லை. அச்சொல்லின் வெளிப்பொருள்' என்பது பலர் ஒப்புக்கொண்டு வழங்கும் பொருள் ஆகும். இது அகராதி எல்லைகட்டிக் கூறும் புறவயமான பொருளாகும். வழக்கம் வரையறைப்படுத்திய எல்லைவரை இப்பொருள் வழங்கும். அகவயப் பொருளின் நெகிழ்ந்து செல்லும் தன்மையை நோக்க இப் புறவயப்பொருள் கிட்டத்தட்ட உறைந்து கிற்கும் தன்மையுடையது. ரிச்சர்ட்ஸ் கூறும் சொற்பொருள் : டாக்டர் ஐ. ஏ. ಕ್ಲ 616-7 இரு சொல்லுக்கு வெவ்வேறான நான்கு பொருள்கள் இருப்பதாகக் குறிப்பிடுவர். அவற்றை அவர் 15. ursor #3 - Ballard P.B.: Thought aud Language-page 46. 16. gxsörl-& - Stimulus. 17. GaisfüGurgoor-Outer meaning. 18. ®ú11š@ *ir sàr@ 6uir şığıh Gurgščir-Covenanted meaning

  • uri ** : The Practical Criticsm pp. 79 –88, 330–1, 353– 7; and Principles of Literary Criticism pp. 195, 286.