பக்கம்:பாட்டுத் திறன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - பாட்டுத் திறன் யமைத்துக்கொள்கின்றார். கேட்போரிடம் தான் இணக்கமாக இருக்கவேண்டும் என்று விரும்புங்கால் மேற்கொள்ளும் தொனி அவரை வல்லந்தமாகச் சண்டைக்கிழுக்கும்போது மேம் கொள்ளும் தொனியினின்றும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இறுதியாக உள்ளது உள்நோக்கம்; இதைத் தொனியி னின்று எளிதாக வேறு பிரித்து அறியமுடியாது. வஞ்சப் புகழ்ச்சியை உள்நோக்கத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சொல்லுவோர் ஒன்றைக் கூறுகின்றார்; அஃது எதிரான பொருளைத் தருகின்றது. கேட்போரைத் தன்னுடைய சொல்வழிப்பொருளை* அப்படியே முற்றிலும் எதிரான பொருளாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பது கூறுவோரின் உள்நோக்கமாகும். எனவே, காம் ஒரு சொல்லின் பொருள் அது உணர்த்தும் கருத்தேயென்றும், அதுவே ஏனைய மூன்றற்கும் அடிப்படையாக அமைகின்றது என்றும் அறிகின்றோம். சாதாரணமாக நாம் பேசுங்கால், கருத்துமட்டிலும் உணர்த்தப் பெறுகின்றது; அதில் உணர்ச்சியைப் புலப்படுத்துவது அரிது. எனைய இரண்டு கூறுகளையும் புலப்படுத்துவது மேலும் அரிது. எனவே, ஒரு சொல்லின் பொருளை யறியவேண்டுமாயின், அது சுட்டும் எல்லை முழுவதையும் அறிதல் வேண்டும். சொல்லால் ஆக்கப் பெறுவது கவிதையாதலின், கவிதையை அநுபவிக்க வேண்டுமாயின் அதிலுள்ள சொற்களின் பல்வேறு பொருள் களை இடம் நோக்கி அறிதல் இன்றியமையாதது. சாயல் , சாயல்" என்பது ஒருவகைக் குறியீடு. முன்னதாக உணர்ந்த புலன் உணர்ச்சிகளைத் திரும்பவும் வெளியிடுங்கால் அவை சாயல்களாகின்றன; சாதாரணமாக அவை வன்மையற்று முழுமை பெறாத வடிவிலேயே இருக்கும். நாம் இரவு உணவு முடிந்து ஒரு சாய்வு காற்காலியில் உட்கார்ந்து கொண்டு அன்றைய அநுபவங்களைச் சிந்தித்தல் கூடும். நாம் துய்த்த நிகழ்ச்சிகள், அல்லது நமக்குத் தொல்லைகள் விளைவித்தவை கள் யாவும் மறைந்துபோயின. ஆனால், அவை திரும்பவும் 27. வஞ்சப் u-go-Irony. 28. Grosofiauror-Literal meaning. 39. *ru*-Image. -