பக்கம்:பாட்டுத் திறன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 135 கம்மிடம் வருகின்றன. காரணம், நாம் அவற்றை வேண்டு மென்றே மீள்நோக்குலைகின்றோம்: அல்லது நாம் விரும்பாம லேயே அவை கம்மிடம் திரண்டு வருகின்றன. ஒரு சிலவற்றில் தான் சாயல்கள் முழுமைபெற்றுள்ளன, அல்லது அசல் புலனுணர்வைப் போலவே உறைப்பாக உள்ளன. ஆனால், சிலரிடம் அவை மிகத் தெளிவாகவுள்ளன; ஆகவே அவை ஒரு வகை மனச்செயலாகவே கணக்கிற்கெடுத்துக் கொள்ளப் பெறுதல்வேண்டும். முதலில் பொருள்கள் எவ்வடிவில் அநுபவிக்கப் பெற்ற னவோ அவ்வடிவிலேயே அவை திரும்பவும் நம்மிடம் உண்டா கின்றன. எல்லாச் சாயல்களையுமே பார்வையுணர்ச்சிக் குரியவை என்று சொல்லுதல் இயலாது. அவை கேள்விபுணர்ச்சிக் குரியவையாக இருக்கலாம்; ஊற்றுணர்ச்சிக் குரியவையாக இருக் கலாம்; சூட்டுணர்ச்சிக் குரியவையாக இருக்கலாம்; மண வுணர்ச்சிக் குரியவையாக இருக்கலாம்; அல்லது சுவையுணர்ச்சிக் குரியவையாகவும் இருக்கலாம். அவை ஒன்றோடொன்று சேர்ந்தே நம்மிடம் வருகின்றன. சில சாயலில் குரைக்கும் நாய் காணப் பெறலாம்; மயிர்ப்பட்டுபோன்ற அதன் உரோமத்தை காம் தொட்டுணரலாம். கடலில் ரோடிய பிறகு, உருண்டுவரும் அலைகளை மனத்தால் காணலாம்; அவை உறுமிக்கொண்டுவந்து கரையில் மோதி உடைந்து திவலைகளாகவும் துளிகளாகவும் சிதறுவதைக் கேட்கலாம்; நம்முடைய பாதங்கள் வழுக்கிய கிலை யில் ரிேன் அமுக்கத்தை உணரலாம்; வாயில் படும் நுண்துளிகள் உப்புகரிப்பதையும் உணரலாம். வன்மையான, தெளிவான சாயல்களை எழுப்பும் வருணனைப் பாடல்களை நாம் நன்றாகத் துய்க்கின்றோ மன்றோ? பொதுமைக்கருத்து பொதுமைக்கருத்து' என்பது மற் றொரு வகைக் குறியீடு. ஒருவகைப் பொருள்களைப் பார்த்து அநுபவித்து அதனால் பெற்ற முடிவே இது.காம் பல்வேறுவகைப் பூனைகளைப் பார்க்கின்றோம்; அல்லது நாய்களைக் காண்கின் றோம். ஆனால், அவற்றுள் பொதுமையாகவுள்ள பூனை-மை" அல்லது நாய்-மை'யையே இனங்காண்கின்றோம். இந்தப் பொதுமைக் கோலமே நாய் அல்லது பூனை என்ற கருத்தாக நம்மிடம் அமைகின்றது. பொதுமைக்கருத்து உண்டாவதில் 80. மீள்நோக்கு Recali, 81. பொதுமைக் கருத்து - Concep;. 82, u, so or solo - Cat-ness. 38. Frû-on in - Dog - ness