பக்கம்:பாட்டுத் திறன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 13?' சிந்தனை சமூக நிகழ்ச்சிகளைக் கொண்டே வளர்ச்சி பெறு கின்றது. நாம் விடுக்கும் வினாக்களைக் கொண்டோ, அல்லது தான் கண்டதை வருணிப்பதிலோ, தனக்குத் தேவையான வற்றை விளக்குவதிலோ ஒரு குழந்தை சிந்திப்பதில் தூண்டப் பெறுகின்றது. கலந்தாய்தலும் வாதமும் வயதுவந்தவர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: தனியாளும் தனியாக இருக்கும் பொழுது தான் பேசும் உணர்ச்சியுடனேயே சிந்திக்கத் தொடங்கு கின்றான். இவற்றிற்கெல்லாம் நினைவுகூர்வதற்குச் சாதகமா யுள்ள மொழி சிந்தனைக்குரிய பொருள்களைத் திரட்டுவதற்குத் துணைபுரிகின்றது. மொழி உருவம் பெற்ற மெய்ம்மைகளையும் விதிகளையும் நினைவு கொள்வது எளிது. கன்முறையில் தொடுக்கப்பெற்ற சொற்றொடர்களைக்கொண்டு விளக்கப் பெறும் விதிகள் நினைவில் தங்குவது எளிது. அங்ங்னமே, கவிதைகளையும் எளிதில் நினைவு கூரலாம். கவிதைகள் யாவும் கருத்துகளைச் செஞ்சொற்களால் அழகுபடத் தொகுத்துவைத் துள்ள அற்புதச் சாதனங்களாகும். கவிதை : கவிதையைப்பற்றி எத்தனையோ அறிஞர்கள் எத்தனையோ விதமாகக் கூறியுள்ளனர். அவற்றைத் திரும்பக் கூறிப் படிப்போரைச் சலிப்படையச் செய்வதைவிட மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் சுருங்கக்கூறுவது பொருத்த முடைத்தாம் எஸ்ரா பவுண்ட்’ என்ற ஆங்கில அறிஞரின் கருத்துப்படி இலக்கியம் என்பது பொருட்செறிவுடைய சொற் கள் கிறைந்த ஒரு கருவூலமாகும். 'பேரிலக்கியம் என்பது உயர்ந்த எல்லைவரை பொருளுட்டம்பெற்ற மொழியாகும்' என்பது அவர் கூற்று. மேலும் அவர், உரைநடை சொற் பெருக்கு நிறைந்த அதிகச் செய்திகளடங்கிய சாதனம் என்றும், கவிதை என்பது சொற்செட்டும் உணர்ச்சிப்பெருக்கும் நிறைந்த சாதனம் என்றும் கூறிக் கவிதைக்கும் உரைகடைக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டுவர். நம்முடைய பவணந்தியார் கூறியுள்ள, "பலவகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’’’ என்ற கவிதைபற்றிய நூற்பாவும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. 88. ssors ualsin ... - Ezra Pound. 89. நன்னூல், நாற்பு 8ே8: