பக்கம்:பாட்டுத் திறன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாட்டுத் திறன் கவிதை அதனை நுகரும் திறன் உடையவர்கட்கு என்றும் புதுமையின்பம் நல்கவல்லது. அஃது அறிதோறும் அறியாமை கண்டற்றால். கவிதை, மனத்தின் உயர்ந்த நிலையிலிருந்து பிறந்தது. மனமோ அளந்தறியமுடியாத ஆழம் உடையது; உளவியலறிஞர்களும் அதன் எல்லையை அளந்தறியமுடியாது திகைக்கின்றனர். மனத்தை அறிய அறிய அது மேன் மேலும் ஆர்வம் ஊட்டவல்லது. அத்தகைய மனத்தின் உயர் எல்லையி லிருந்து தோன்றிய கவிதை என்றும் வளஞ்சுரந்து இன்பம் கல்க வல்லது. கவிதையைப் படிக்கப் படிக்க அஃது இன்பத்தின் பரப்பையும் துன்பத்தின் ஆழத்தையும் மேன்மேலும் விளக்க வல்ல அரிய ஆற்றலைக் கொண்டது. 'கவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு' என்று வள்ளுவர் பெருமான் குறித்த நயம் கவிதைக்கே உரியது. இது கருதியே பாரதியாரும், பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும்' என்று கூறினார். கவிதையைப் படிப்போர் அறிந்துகொண் டோம்!” என்று அதனை ஒதுக்கும் கிலை அவர்கட்கு என்றுமே எற்படுவதில்லை. இதனால்தான் கவிதை இலக்கியம் பற்பல நூற்றாண்டுகளாக கிலைத்து வாழ்கின்றது. கற்பவர்களும் தலைமுறை தலைமுறையாக அதனைத் திரும்பத்திரும்பக் கற்றுப் புதுமையின்பம் எய்துகின்றனர். கவிதையைப் பாடியவரின் உணர்ச்சியநுபவமும் அதைப் படிப்பவரின் உணர்ச்சியதுபவமும் ஏறக்குறைய ஒன்றாக ஆகிவிட்டால், படிப்பவர் கவிதையை அநுபவிக்கும் தகுதி பெற்றுவிட்டார் என்று கருதலாம். கவிஞன் உணர்ந்த அநுபவம் அவன் யாத்த கவிதையில் பொதிந்துள்ளது. தன் அநுபவத்திற்கு ஓர் அழகிய வடிவம் தந்து அதனைப் பெற வைக்கின்றான் கவிஞன். தன் அநுபவத்தை ஒரு செய்திபோல் கூறாது அதனையே கவிதை மொழியாகப் பெயர்த்துவிடு கின்றான். கவிஞனின் உணர்ச்சி கவிதையில் சொற்களாகவும், 40. குறள் 783 - 41. பாரதியார்: காணி நிலம் வேண்டும்" என்ற பாடலில்,