பக்கம்:பாட்டுத் திறன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 13? சொற்களின் தொடர்பின்றியே மனக்கண்ணில் அந்தச் சாயல் புலப்படுதல் வேண்டும். சொற்கள் சொற்களாக ஒலிக்கும் நிலைமாறி, அந்தப் பொருள்களே மனக்கண்ணில் தோன்றி விளங்கவேண்டும். இஃது ஒவியத்தில் அல்லது நாடக அரங்கில் காண்பதுபோன்ற காட்சி. என் நண்பர்கள் திரு. முனியாண்டி என் அருமை அன்னையாரின் ஒவியத்தை ஒரு வண்ணப்படமாக எழுதித் தருகின்றார். அந்த ஓவியத்தை நான் முதலில் காணும்போது இது திரை, இது வண்ணம், இம்முறை முனியாண்டி அவர்களின் கைத்திறன் என்ற எண்ணமெல்லாம் ஏற்படுகின்றது. ஒவியத்தின் அழகில் மனம் ஈடுபடத் தொடங்கியவுடன் இஃது என்னை அன்புடன் எடுத்து வளர்ந்த கை, இஃது இயல்பாக எல்லோரிடமும் கண்ணோட்டம் காட்டிய கண், இஃதுஎனக்குப் பலமுறை அறிவுரைதந்த வாய் என்ற உணர்வு பிறக்கின்றது. அங்ங்னமே, நாடகத்தில் அல்லது பேசும் படத்தில் தொடக்கத் தில் கட்ட பொம்மனாக நடிப்பவர் இன்னார், ஊமைத்துரையாக நடிப்பவர் இன்னார், பாதர்வெள்ளையாகவும் வெள்ளையம் மாளாகவும் நடிப்பவர்கள் இன்னார் இன்னார் என்ற எண்ண மெல்லாம் வருதல்கூடும். ஆனால், உருக்கமான காட்சியை நாம் காணும்பொழுது நாம் நடிகர்களை மறந்துவிடுகின்றோம்; கதையுடன் ஒன்றிக் கதை நிகழ்ந்த காலத்திற்குப் போய்விடு கின்றோம். கற்பனையுலகில் அவர்கள் படும் துன்பத்தை உணர்ந்து உள்ளம் உருகிக் கண்ணிர் விடுகின்றோம். திரு. சிவாஜி கணேசனின் வீரமுழக்கத்தைக் கட்டபொம்மனின் வீரமுழக்கமாகவே எண்ணி உருகுகின்றோம். இக்கிலையில் மேற்கூறிய பாடல்களின் சொற்கள் ஒருவகைய்ாக நம்மை விட்டு நீங்கி அருச்சுனனின் தவக்கோலம் மட்டிலும் 5ம் மனக்கண்ணில் தோன்றவேண்டும். அவன் ஒருகாலில் அசையாமல் கிற்கும் நிலையையும், யானைகள் அவன்மீது உராயும் கிலையினையும், அரவங்கள் அவன்மீது ஊர்வதையும், பூங்கொடிகள் அவன்மீது படர்ந்து நிற்பதையும் வரிசையாக நம் மனம் காண்டல் வேண்டும். விடுதலைச் சாயல்கள்", பார்வைப்புலச் சாயல்கள், மனக் கண்ணிலுள்ள படங்கள் ஆகியவை ஏனைய வகைச் சாயல்களை 80. விடுதலைச் சாயல் Free images.