பக்கம்:பாட்டுத் திறன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாட்டுத் திறன் யெல்லாம் புறக்கணித்துத் திறனாய்வு இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. காரணம், ஒவ்வொரு புலன் உணர்ச் சிக்கும் அவற்றோடொத்த ஒவ்வொரு வித சாயல்கள் இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். கவிதை நுகர்ச்சியில் ஈடுபடும் பலரும் ஒரேவித சாயல் களையே பெறுகின்றனர் எனக் கருதுதல் தவறு. ஓரளவு அறியாமை நீங்கி அறிவு வளர்ந்துள்ள இக்காலத்திலும்கூட இத்தகைய தவறான கருத்து நிலவுவது கண்கூடு. இதன் அடிப் படையில் அவசரமாகவும் மேம்போக்காகவும் அமைந்துள்ள திறனாய்வு கடியப்பெறாமலிருப்பது விந்தையே. தனிப்பட்டோர் சாயல்களின் வகைகளை மேற்கொள்வதிலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாயல்களின் வகைகளை மேற்கொள்வதிலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாயல்களை உண்டாக்குவதிலும், வேறுபடுகின்றனர் என்பது தெளிவு. அவர்கள் ஒரு கவிதையை அல்லது அதன் ஒர் அடியைப் படிப்பதால் பெறும் கிளர்ச்சி களைக் கவனிக்கும்பொழுது இந்தச் சுயேச்சையான சாயல்களே இருவரின் படிப்புகளையும் வேறுபடுத்துகின்றன என்பதை அறிகின்றோம். ஆயினும், இந்த வேற்றுமை பொருட்படுத்தத் தக்கதன்று. இங்ங்னமே, ஐம்பதுபேர் ஒரு கவிதையைப்படிக்கும் பொழுது அவர்கள் பொதுவாகவுள்ள மனப்படத்துடன் ஐம்பது வெவ்வேறான மனப்படங்களையும் பெறுவார்கள் என்பது ஒருதலை. படங்களிலிருந்து பெறும் பார்வைச் சாயலின் அடிப் படையில் ஒரு கவிதை மதிப்பிடப் பெறுமேயாயின், அத்தகைய திறனாய்வு விரும்பத்தக்கதன்று. இத்தகைய ஒரு கவிதை பழநிவத்தை வற்புறுத்துகின்றவர்கள் படங்களைப் பற்றிப் பண்படாத கோக்கங்களை யுடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சாயல்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான புலனுணர்ச்சியை முக்கியமாக மேற்கொள்ளக்கூடும். எடுத்துக்காட்டாக, குயில்' என்னும் சொல் சிலருக்குக் குயிலின் கரிய உருவத்தை மனக்கண்முன் தோற்றுவித்தல் கூடும். வேறு சிலர் குயில் கூவுதலைச் சாயல்களாகக் கேட்டல் கூடும். இங்ங்னமே, ஒரு சொல்லுக்குப் பலர் பலவிதமான புலனுணர்ச்சிகள் மூலம் பலவிதச் சாயல்களைப் பெறுதல் கூடும். . இந்தச் சாயல்கள் வெவ்வேறு விதமாக இருப்பினும் ஒரேவித