பக்கம்:பாட்டுத் திறன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-1 பாட்டுத் திறன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும்: என்று கூறினார் பாரதியார். இப்படிக் கவிதையின் மீது பேரார்வம் கொண்ட பாட்டரசர், செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்? பாட்டிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்: என்பதும் அவர்தம் வாக்குகளே. எல்லாத் தொழில்களும் செயல்களும் சக்திதேவியின் அருளால்தான் கடைபெறுகின்றன என்று கம்புபவர் பாரதியார். பாட்டுகள் பாடுவதும் அவள் அருளே என்றும் கருதுவதும் அவர்தம் கம்பிக்கையாகும். கவை.புதிது. பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதிமிக்க வைகவிதை' என்று பாராட்டத்தக்க கவிதைகளைப் படைத்த பெருமகனார் இவர். இங்ங்னம் பண்டையோர் முதல் இன்றிருப்போர்வரை பாடிய கவிதைகளின் திறனை-பாட்டுத் திறனை-கூறப் புகுவது தேனின் இனிமையைப்பற்றி உரைப்பதோடொக்கும். தேன், 1. பாரதியார் கவிதைகள் : தேச.பா. காணி நிலம்-3 2. x * வி. நா. மாலை-28 ఫీ, 冬沙 , தேன. பா. பேதை நெஞ்கே அேங்கடேச பூபதி -2 (8)

  1. , 鑿新
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/15&oldid=812343" இலிருந்து மீள்விக்கப்பட்டது