பக்கம்:பாட்டுத் திறன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 189 எண்ண அலைகளையே எழுப்பும். இங்ங்னம் சாயல்கள் எண்ண அலைகளை எழுப்புவதாயிருப்பின், அவை எந்தப் புலனுணர்ச் சியுடன் தொடர்பு கொண்டவை என்பது முக்கியமன்று. எனவே படிக்கும்பொழுது அவசரமில்லாமலும், காம் படிக்கும் பகுதியின் சாயல்கள் மனத்தில் திறம்பட எழுவதற்கு வேண்டிய கால இடையீடு அளித்தும் படித்தலை மேற்கொள்வது இன்றி யமையாதது. ஆயினும், சில சமயங்களில் சாயல் மிகவும் தெளி வாக இருந்தால் கவிதையநுபவத்திற்கு அஃது ஊறு விளை வித்தலும் கூடும். ஏனெனில், ஒவ்வொரு சாயலும் ஒவ்வொரு குறிப்பிட்ட எண்ணத்தை எழுப்புவதற்குப் பயன்பட்டாலும், எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தால் ஒன்றுக் கொன்று ஒவ்வாததாகவும் இருக்க நேரிடும். - நான்காம் கிலை : இதற்கு முன்னர் வாழ்க்கையிலும் கவிதை களிலும் பெற்ற அநுபவங்களின் கினைவுகள் நாம் படிக்கும் கவிதைகளோடு சேர்ந்து கிற்றல். - இப்பொழுது நாம் அடிப்படையான விளைவுகளைப் பற்றி ஆய்தல் வேண்டும். இந்த விளைவுகளைத்தான் காம்மேலே அநுபவத்தின் மதிப்புகளுக் குரியவைகளாக வற்புறுத்திக் கூறினோம். இங்கிலையில் மீட்டும் மேற்கூறிய படத்தை (படம் 8 பக்கம்-143) ஆராய்தல் கலம் பயக்கும். சொற்களின் பார்வைப்புலன் உணர்ச்சிகளிலிருந்து மனம்போல ஒழுங்கற்றுக் கீழ்நோக்கிச் செல்லும் செங்குத்துக் கோடுகளைக் காண்க. இவை கட்டுண்ட சாயல்களின் வழியாக மேலும் வரைபடத்தின் அடிநிலைவரையிலும் செல்லுகின்றன. இவை மனத்தில் ஆற்றொழுக்குபோல் செல்லும் உள் துடிப்புகளை விளக்குவன வாக அமைந்தவை. மேற்குறிப்பிட்ட செங்குத்துக் கோடுகள் பார்வைப் புலன் உணர்ச்சியில் தொடங்குகின்றன. ஆனால், அவற்றின் போக்கு இன்னும் எந்த அளவு இருக்கும் என்று காட்டுவதற்காகவே கட்டுண்ட சாயல்களும் தீட்டப்பெற்றுள்ளன. சில விடுதலைச் சாயல்கள்" பார்வைப் புலலுணர் சொற்களிலிருந்து மட்டிலும் எழக் கூடுமாயினும், அவை பெரும்பாலு கட்டுண்ட சாயல் களின் விளைவாகவே எழுகின்றன. எனவே இப்படத்தில் முறை 61, så©šso swä &ruso disir-Free images.