யணைந்த கூறுகளாகிய (formal elements) கட்டுண்ட சாயல் களின் முக்கியத்துவம் வற்புறுத்தப் பெற்றுள்ளது. ஆற்றொழுக்குப்போல் உள் துடிப்புகள் மனத்தில் பாய்ந்து செல்லுகின்றன என்று மேலே குறிப்பிட்டோமல்லவா? இவை அநுபவங்களால் கிடைப்பவை. மனம் என்பது ஏற்கெனவே நாம் பெற்ற உள் துடிப்புகளால் ஒழுங்கான முறையில் கம் மிடையே முன்னதாக அமைந்த சாதனம். புதிதாக நாம்பெறும் உள்துடிப்புகள் மனத்தில் எங்குச் சென்று எவ்வாறு துலங்கு கின்றன என்பதெல்லாம் மனத்தின் சிலையைப் பொறுத்தது; இம்மனநிலை முன்னமேயே அது பெற்ற உள்துடிப்புகள் செயற் பட்டு கிற்கும் கிலையைப் பொறுத்தது. எந்த அநுபவத்திலும் உள்துடிப்புகள்தாம்-அவற்றின் திசை, அவற்றின் உறைப்பு, அவை ஒன்றோடொன்று சேர்ந்து புதிய உருவம் பெறும் முறை -ஆகியவை இன்றியமையாத அடிப்படைப் பொருள்களாகும். இவை செயற்படுவதற் கேற்றவாறுதான் பிறகூறுகள் யாவும்அவை அறிவைச் சார்ந்தவை யாயினும் சரி, அன்றி உள்ளக் கிளர்ச்சி பற்றியவை யாயினும் சரி-எழுகின்றன. கண்ணின் மூலமாகப் பெறும் துண்டலின் சிறு கசிவே நம் மனத்தில் மிக நுட்பமாகச் சமநிலையில் அமைந்து கிடக்கும் எண்ணற்ற மனப் போக்குகளின்" அமைப்புகளின்" தொகுதியைச் சந்திக்கின்றது. இச் சிறு கசிவு யாதொரு துணையுமின்றி மேற்கண்ட அமைப்பு களைக் கலைவுசெய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளது. ஒரு சொல்லைப் பார்த்தவுடனேயே, அதைக் கேட்காமல் அல்லது மனத்தாலும் உச்சரிக்காமல், அதன் சொல்வழிப் பொருளை (literal Sense)ப் புரிந்துகொள்ள முடிகின்றது. அஃதுடன் அது கின்றுவிடுவதில்லை. ஆனால், இத்துாண்டலின் விளைவுகள் கட்டுண்ட சாயல்களால் புதிதாகப் பெறும் தூண்டலால் அதிகப்படுத்தப் பெற்று விரிவு பெறுகின்றன. இவற்றின் மூல மாகவே, பெரும்பாலான உள்ளக் கிளர்ச்சி விளைவுகள் ஏற்படு கின்றன. கிளர்ச்சி தொடங்கவே கிளர்ச்சியுறும் ஒவ்வொரு புதிய அமைப்பிலிருந்தும் புதிய தூண்டல்கள் வருகின்றன. இவ்வாறு காகிதத்தின் மீதுள்ள குறிகளின்" காட்சியால் ஏற்படும் மிகச் சிறிய தூண்டல் மனத்தின் ஆற்றல் முழுவதையும் கிளப்பிவிட முடிகின்றது என்ற உண்மையினை நாம் அறிகின்றோம். 62. tasarừdur #G-Tendency. 8ே, அமைப்பு -System. 64. ©AE ssir -Mark,
பக்கம்:பாட்டுத் திறன்.pdf/151
தோற்றம்