பக்கம்:பாட்டுத் திறன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாட்டுத்திறன் வினையின் காரணத்தில் குறியீட்டில் ஒரு பகுதி நம் கண்முன் தோன்றினால் எஞ்சிய பகுதியை எண்ணுதல் நம் மனத்தின் இயல்பாகிவிடுகின்றது. ஒரு கவிதையைப் படிக்கும்பொழுது அக்கவிதையிலுள்ள சொற்கள் உணர்த்தும் கருத்தினை முதலில் பெறுகின்றோம்; ஆனால், இதனைத் தவிர நம்மிடம் தோன்றும் பிற எண்ணங் கள்-ஏன்? எண்ணக் கோவைகள்-மிக முக்கியமானவை அன்று என்று சொல்ல முடியாது. இவை கேள்விப்புலச் சொற்சாயலால் ஏற்படலாம்; இவை ஒலிக்குறிப்புச் சொற்கள்’ எழுப்பும் எண்ணங்களாகும்; இவை பொருட் சார்பின்றி இருத்தல் அரிது. ஆனால், இவற்றைவிட முக்கியமானவை கவிதை யுணர்த்தும் கருத்திலிருந்து விளைபவையேயாகும்; அவற்றிலிருந்து வலை போன்ற எண்ணற்ற விளக்கங்களும் சிந்தனைகளும் எழுகின்றன. சுடர்செல் வானம் சேப்பப் படர்கூர்ந்து எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார் மயங்கி யோரே குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை பகலும் மாலை துணையி லோர்க்கே.' என்பது கணவனது பிரிவாற்றாமையால் துயருறும் தலைவி யொருத்தியின் மனகிலையை விளக்கும் பாடல். இதில் வானச் சுடர் சென்று மறைதல், உள்ளத்தின் ஒளி மங்குவது போன்ற கிலையைப் புலப்படுத்த உதவுகின்றது. முல்லை மலர்தல், தலைவி முன்பெல்லாம் விழைந்ததையும் அதற்கு இயைந்த பழைய காதல் வாழ்க்கையையும் கினைந்து மாலையில் துயருறுதலை உணர்த்துகின்றது. உலகத்தாரை எல்லாம் பொருட்படுத்தாத தலைவியின் மனநிலையும் அவர்களுடைய சொற்கள் யாவும் பொருளற்றன என்று அவள் கருதும் மனங்லையும் மயங்கியோர்' என்ற தொடரால் பெறப்படு கின்றன. பெரும் புலர் விடியலும் மாலை பகலும் மாலை' என்று தொடர்களில் தலைவியின் உள்ளக்குமுறல் தொனிக் கின்றது. 74 9sâżGÉủą# G*rá o Onomatopoeic word, 35. குறுத் 284.