உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டுத் திறன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் f45 கம்பனிலிருந்து ஓர் எடுத்துகாட்டு தருவோம். குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் இரங்கி ஏக மழைக்குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வருமென்றென்று தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன்ஒரு தமியன் சென்றான்." முடிபுனைந்து கொள்ளும் தன் அருமை மகன் தன்னிடம் ஆசி பெற வருவான் என்று எதிர்பார்த்து கிற்கும் கோசலையின் நிலையையும் அவளுக்கு முன்னால் இராமன் செல்வதையும் சித்தி ரிப்பது இப்பாடல். இப் பாடலில், மழைக் குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் என்பது எதிர்பார்த்து கிற்கும் தாயுள்ளத்தை உணர்த்துகின்றது. என்றென்று’ என்ற அடுக் கில், பெற்ற தாயின் உள்ளம் பலமுறை எண்ணிக் கனவு கணடி ருந்த ஆசையும் ஆவலும் புலனாகின்றன. தழைக்கின்ற உள்ளம்' என்ற சொற்றொடரின் பொருள், அன்பால் கிளர்ந் தெழும் தாயுள்ளத்தைக் காட்டுகின்றது; தழைக்கின்ற' என்பது, இதற்குமுன் எங்குமே கண்டிராத ஒரு புதுப் பொருளை உணர்த்துவதை அறிகின்றோம். அன்னாள் என்ற சொல், அத்தாயைத் தொலைவில் நிறுத்திக்காட்டி இரக்கமுறச் செய்கின்றது. காரணம், என்ன கிகழப்போகின்றது என்பதை காம் அறிவோம்; கோசலை அறியமாட்டாள் அன்றோ? மேலும், - ஒரு தமியன்' என்ற தொடரில் பெரிய விருதுகளுடனும் மக்கள் சுற்றத்துடனும் வராமல் தனியாக ஒரு பரதேசிபோல் வருவதை' உணர்த்துகின்றது. . தன்னிடம் ஆசிபெறத் தனயன்-பாராளப்போகின்றவன்வருவான் என்று எதிர்பார்த்திருக்கும் கோசலையின் முன் இராமன் வருகின்றான். முடிபுனையும் நிலையில் வந்திலன்; சாதாரண கிலையில்தான் வருகின்றான். குழைக்கின்ற கவரியின்றிக் கொற்றவெண் குடையும் இன்றி வருகின்றான். 'குழைக்கின்ற கவரி, கொற்றவெண்குடை என்ற அழகிய 78. அயோத் - நகர் நீங்கு -2. uit.—10