பக்கம்:பாட்டுத் திறன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 பாட்டுத்திறன் சொற்றொடர்கள் இராமன் பெறுவதற்கிருந்த பேறுகளை எண்ணி ஏங்கச் செய்கின்றன. இராமனுக்கு முன்னால் ஒரு வரும், பின்னால் ஒருவரும் வருவதாகக் கவிஞன் காட்டு கின்றான். முன்னால் வருபவர் விதி'; அனைத்தையும் ஆட்டி வைக்கும் பேராற்றலுடைய ஊழ். இழைக்கின்ற” என்ற சொல் விதியின் போக்கையும் ஆற்றலையும் உணர்த்துகின்றது. பின்னால் வருகிறவர் தருமம்'; இந்தவுலகில் நடை முறையில் அடிக்கடி பல்வேறு சோதனைக் குள்ளாகும் அறம்.அவர் பரிதாப நிலையில் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டுள்ளார். ஏகப் என்ற சொல் இதனை உணர்த்துகின்றது. விதி முன்செல்ல' என்பதிலுள்ள செல்ல என்ற சொல், விதி பெருமிதத்துடன் நடந்துபோவதைக் காட்டுகின்றது. செல்ல ஏக என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளுடையனவாயினும், இப் பாடலில் வெவ்வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்துவதை அறிக. செல்ல என்பதில் விதியின் உரிமையும் செல்வாக்கும் புலப்படுவதாகவும், ஏக என்பதில் தருமத்தின் தோல்வியும் சோர்வும் புலப்படுவதாகவும் அறிகின்றோ மன்றோ? கவிதை களிலுள்ள சொற்களுக்கு அப்பாற்பட்ட பொருள்கள் தோன்றும் காரணமாகவே கவிதை பலருக்குப் பலவிதமான அதுபவங் களைத் தருகின்றது. இதனால்தான் ஒரே கவிதைக்குப் பல்வேறு உரைகள் தோன்றுகின்றன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் திற்குப் பல்வேறு வியாக்கியானங்கள் தோன்றினதற்கும் திருக்குறள்களில் பல உரை வேற்றுமை தோன்றுவதற்கும் இதுவே காரணமாகும் என்று கருதலாம். கவிதையநுபவத்தின் கொடுமுடி : ‘கவிதையதுபவத்தின்’ கொடுமுடி போன்றதோர் எடுத்துக்காட்டினை ஈனடுத் தருவோம். - - உக்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன் கந்தகோ பாலன் மருமகளே, கப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி: கடைதிறவாய், வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின்காண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்பு வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்' ??. திருப்பாவை-18