பக்கம்:பாட்டுத் திறன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பாட்டுத்திறன் களே.* பொருள்களை உணர்வால் காண்பவர்கட்கும்', அவற்றை ஆய்வுமூலம் காண்பவர்கட்கும் உள்ளவேறுபாடு அடை யாளங்களைப் பயன்படுத்துவோருக்கும் குறியீடுகளைப் பயன் படுத்துவோருக்கும் உள்ள வேறுபாடேயாகும். - அடையாளங்களும் குறியீடுகளும் நம்முடைய கடந்தகால அநுபவத்தால் நிகழ்காலத் துலங்கல்களுக்குத் துணைபுரியும் வழிவகைகளாகும். ' குறியீடுகள் மிகவும் எளிமையான முறையில் கையாளப்பெற்று அறிவிக்கப்பெறுவதாலும், அவை பொதுவான இயல்பினைக் கொண்டிருப்பதாலும் அவற்றின் பயன்களை நாம் வெளிப்படையாக அறிகின்றோம். தனிப்பட்ட முறையில் உள்ளத்தே தோன்றும் அடையாளங்களான உள்ளக் கிளர்ச்சிகள் அல்லது உடலுணர்ச்சிகள்' ஆகியவற்றோடு ஒப்பிட்டால் அவற்றின் குறைபாடுகள் அறியப்பெறும். எனினும், அவை அவ்வளவு வெளிப்படையாகத் தோன்றுவ தில்லை. சொற்களை அணிநயமின்றியும் உணர்ச்சியின்றியும் குறியீட்டு முறையில் அல்லது அறிவியல் முறையில் கையாண் டால் அவை சாதாரணமான நிலைமைகளின் ஒரு சில கூறுகளில் மட்டிலும்தான் நம் எண்ணத்தைக் கொண்டுசெலுத்த வல்லவை. ஆனால், உணர்ச்சி சிலசமயம் மிக நுட்பமான முறையில் சுட்டும் சிலையில் உள்ளது. இதனால் விபத்துகளும் விளையலாம். ஏனெனில், அவற்றைச் சான்று முதலியவற்றால் உறுதிப் படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம். அவை குழப்பத்தையும் விளைவித்தல் கூடும். எனவே, எண்ணத்திற்கு எதிராக உணர்ச்சியில் இயல்பான எந்த உயர்வும் இல்லை; அவற்றினைப் பயன்படுத்துவதில்தான் இந்த வேற்றுமை உள்ளது; அங்ங்னமே சிந்தனையில் அல்லது உணர்வதில் அல்லது இரண்டிலும் தவறாக கடப்பவர்களைத்தவிர, இந்த இரண்டிற்குமிடையே எவ்வித முரண்பாடோஅல்லது மோதலோ இல்லை. ஆறாம் கிலை : அந்த உள்ளக் கிளர்ச்சியால் ஏற்படும் மனப் பான்மை. இதில்தான் கவிதையநுபவம் முழுமை நிலை எய்து கின்றது. х 84. அடையாளம் . Sign. 86. e. guig - Symbol, 86. வழிவகைகள்-Meams 87. ---shortésair-Organic sensations