பக்கம்:பாட்டுத் திறன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் Jリ உள்ளக் கிளர்ச்சிகள் மனப்பான்மைகளின் முதன்மையான ஆடயாளங்களாகும், இக் காரணத்தால்தான் அவை கலை யின் கொள்கையில் மிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. ஏனெனில், எந்த ஒர் அநுபவத்திலும் தூண்டப்பெறும் மனப் பான்மைகளே எல்லாவற்றிலும் மிகச்சிறந்த பகுதியாகும். இந்த மனப்பான்மைகளின் மதிப்பு அவற்றின் வடிவத்தையும் இணைக்கும் தன்மையையும் சார்ந்துள்ளது. கனவு கிலையில் ஏற்படும் அநுபவத்தின் உறைப்பு, அதன் விறுவிறுப்பு, அதனால் ஏற்படும் இன்பம் அல்லது துன்பம் ஆகியவற்றால் மட்டிலும் அதற்கு மதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அம்மனப்பான்மையால் தோன்றும் உள்துடிப்புக்கள் விடுதலைப் பாங்குடனும் நிறை வாழ்வுடனும் ஒர் ஒழுங்கில் அமைவத னாலேயே அது சிறந்த மதிப்பினைப் பெறுகின்றது. அதுவே கலையின் அநுபவத்தை விழுமிய பயனுடையதாகச் செய் கின்றது. நொடிப்பொழுது தோன்றி கின்று மறையும் கழிபேருவகைகள்" யாதொரு பயனுமற்றுப் போகின்றன; ஒரு குறிப்பிட்ட காலத்தில் அமையும் கனவு நிலையின் இயல்பு அஃது எந்த உள்துடிப்புகளின் விளைவாகத் தோன்றுகின்றதோ அவற்றின் சிரிய தன்மைக்கு உறுதியான அடையாளமாகக் கொள்ளுதல் பொருந்தாது. அதனை ஒரு தற்காலிக அடையாள மாகக் கொள்ளலாமே யன்றி அஃது பல பொருள் பயப்பதாகவும் தவறான கோக்கினை விளைவிப்பதாகவும் இருத்தலை காம் மறத்தல் கூடாது. தாய்மொழி வளர்ச்சி பற்றி உணர்ச்சி மிக்க சொற்பொழி வொன்றினைக் கேட்கலாம்; கம்முடைய மொழி யுணர்ச்சியும் வீறுகொண்டு எழலாம். ஆனால், அவ்வுணர்ச்சி பலமான கைதட்டலுடன்’ மறைந்து போகவும் செய்யலாம்; அல்லது உண்மையான விழுமிய மொழித் தொண்டிலும் நம்மைக் கொண்டு செலுத்தலாம். இதனால்தான் மொழி வளர்ச்சியற்றிய பிரச்சினை சட்டசபையிலோ அல்லது பாராளு மன்றத்திலோ வருங்கால் சிலரது உணர்ச்சிமிக்க பேச்சு ஆட்சியாளருக்கு வேடிக்கையாகப் போகின்றது; சிலசமயம் நல்ல மனப்பான்மை யையும் உண்டாக்கி விழுமிய தொண்டிலும் கொண்டுசெலுத்து கின்றது. சென்னை மாநிலத்தில் ஏற்பட்ட தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிபற்றிய ஆலோசனைக்குழு' இத்தகைய கல்ல மனப் 88. un sorů uz siren un-Attitude. - 89. stỆ Gugi su so *-Ecstasy. 90 Tamil Development and Research Council