பக்கம்:பாட்டுத் திறன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி : கவிதையின் தத்துவம் கவிதை ஓர் அரிய கலை; நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்க வல்ல ஒர் அற்புதச் சாதனம். கவிதை யநுபவம் அதுகூறும் பொருளில் இல்லை. கூறும் முறையில்தான் உள்ளது. கவிஞன் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெறவேண்டும் என்று எண்ணிச் சில யுக்திமுறைகளைக் கையாண்டு கவிதையைப் படைக் கின்றான். அந்த யுக்திமுறைகளால் உணர்ச்சியை அதில் பொதிய வைக்கின்றான். கற்பனை, சொற்களின் அமைப்பு முறை, ஒலி நயம், யாப்புமுறை, அணி நலன், தொடைநயம், குறிப்புப் பொருள், சுவைகள் போன்ற சில முறைகளை மேற்கொண்டு கவிதையைப் படைக் கின்றான். கவிதையைப் படிக்க வேண்டிய முறையில் இவை தோன்றுமாறு படித்தால் கவிஞன் பெற்ற அநுபவத்தையே நாமும் பெறுகின்றோம். கவிஞன் மேற்கொள்ளும் யுக்திமுறைகளையெல்லாம் ஒரளவு விளக்கமாக எடுத்தியம்புகின்றது. இப்பகுதி.