பக்கம்:பாட்டுத் திறன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 15? அலகில் சோதி யான-ஈசன் அருளி னாலே அமையும் உலகில் எந்தப் பொருளும்-குவிக்கு உரிய பொரு ளாமையா? என்று கூறியிருப்பது ஈண்டுச் சிந்தித்தற் குரியது. பாடுவோரின் அதுபவத்திற்கேற்ப எதுவும் கவிதைக்குரிய பொருளாக அமைய லாம். உலகம் தோன்றியநாள் தொட்டு இன்றுவரையிலுமுள்ள பழம்பொருள்களான இரு சுடர், விண்மீன், கருமுகில், மலை: காடு, ஆறு, கடல், மான், முயல், கிளி, மயில், குழந்தை முதலியவை கவிதைப் பொருள்களாக அமைந்துள்ளன. அங்ங்னமே காதல், வீரம், இன்பம், துன்பம் போன்றவையும் பாட்டில் அமைகின்றன. இவை பழம்பாடல்களிலும் இடம் பெற் றுள்ளன; புதுமையான பாட்டுகளிலும் இடம் பெறுகின்றன. இவற்றிற்கு உணர்ச்சி யூட்டிப் புது மெருகேற்றிப் படைக்கும் திறன் கவிஞர்களிடமே உள்ளது. எனவே, கவிஞன் பழம் பொருளை நீக்கிப் புதிய பொருளை அல்லது அரிய பொருளைக் கவிதைப் பொருளாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றாகின்றது. ஒரே பொருள்பற்றி மிகச் சிறந்த கவிதையும் தோன்ற லாம்; மிக மட்டமான செய்யுளும் தோன்றலாம். தாழ்ந்த பொருள் பற்றி உயர்ந்த கவிதையும் தோன்றக்கூடும்; உயர்ந்த பொருள் பற்றித் தாழ்ந்த கவிதையும் தோன்ற இடமுண்டு. எனவே, பொருளின் பெருமைக்கும் சிறுமைக்கும் ஏற்பக் கவிதை யின் பெருமையும் சிறுமையும் அமையும் என்று கூறுதல் முற்றி லும் பொருந்தாது. கவிதை சிறப்பது அதனைப் படைக்கும் கவிஞனின் அநுபவத்தைப் பொறுத்தது; அவன் அவ்வது பவத்தைக் கூறும் முறையினையும் பொறுத்தது. வாழ்க மனைவியாம் கவிதைத தலைவி! தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும் பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல் பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும் வெறுங்கதைத் திரளை வெள்ளறி வுடைய 8. கவிமணி: மலரும் மாலையும் கவிதை.6. 7. s.sâană -Poetry, 8. Galii ageir - Verse,