பக்கம்:பாட்டுத் திறன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 х பாட்டுத் திறன் மாயா சக்தியின் மகளே! மனைக்கண் வாழ்வினை வகுப்பாய், வருடம் பலவினும் ஒர்காட் போலமற் றோர்காள் தோன்றாது பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ கடந்திடுஞ் சக்தி கிலையமே! கன்மனைத் தலைவி! ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயன்நிறை அநுபவ மாக்கி, உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து வான சாத்திரம், மகம்மது வீழ்ச்சி, சின்னப் பையல் சேவகத் திறமை: எனவரும் நிகழ்ச்சி யாவே யாயினும், அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் பேதைமா சத்தியின் பெண்ணே! வாழ்க!" என்ற பாரதியாரின் பாடல் மேற்கூறிய கருத்தினை நன்கு விளக்குவதாகும். கவிஞனின் புலன் காட்சி' கம்மிடம் உணர்ச்சி இருப்பதா லும், அவ்வுணர்ச்சியைப் பிறருக்கு உணர்த்தும் திறனை நாம் பெற்றிருப்பதாலும், நாமும் ஓரளவு கவிஞர் நிலையில்தான் உள்ளோம். ஆனால், கவிஞர்கள் என்று நாம் போற்றுபவர் களிடம் இவ்வுணர்ச்சி அதிகமாக உள்ளது;தாம் உணர்ந்தவற்றை மிக நன்றாக, பிறரிடமும் அவ்வுணர்ச்சி கிளர்ந்தெழச் செய்யும் வகையில், வெளியிடக்கூடிய வன்மையுடையவர்களாகவும் உள்ள் னர். சுருங்கக்கூறின், அவர்களுடைய புலன்கள் எண்ணற்றவை; மிகக் கூர்மையானவை. அவர்களுடைய குரல்களும் சாதாரண மக் களுடைய குரல்களைவிட மிக அகன்றவை. நாமெல்லோரும் ஓர் அரைக் குருடனைப் போல் ஒளியைக் காண்கின்றோம்; மலை, முகில் அல்லது மலரின் அழகைப் பார்க்கிறோம். ஆனால், அவற்றைக் கவிஞன் ஒளிவீசும் அழகுடன் பொலிவதைக் காண் கின்றான்; அப்பொலிவு அவன் உள்ளத்தைக் கவர்ந்து களிப்பால் அவனைக் கூத்தாடச் செய்கின்றது; திரும்பவும் அப்பொருளை அக்கறையாகப் பார்க்க கம்மைத் துண்டுகின்றது. இன்னும் நாம் ஒர் அருவியின் இசையின் எதிரொலியை அரைச் செவிடன் 霉。 பாதியார் பாடல்கள் : கவிதைத் தலைவி . 10. u • sirarc.6 - Perception.